திரைத் துறையில் இருப்பவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சொகுசு வீடு, கார்கள் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்ற பரவலான எண்ணம் உள்ளது. ஆனால் பல நடிகர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை புத்திசாலித்தனமாக பங்குகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானத்தை பார்க்கின்றனர்.
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அமிதாப் பச்சனும் அப்படியொரு நபர் தான். அவர் முதலீடு செய்த ஒரு நிறுவனத்தின் பங்கு குறுகிய காலத்தில் மல்டிபேக்கர் வருமானத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

நடிகர் அமிதாப் பச்சன் ஸ்மால்கேப் பங்கான டி.பி. ஓயர்ஸ் நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபலமான ஸ்டீல் கம்பி தயாரிப்பு நிறுவனம் தான் டி.பி.ஒயர்ஸ்.
2018 செப்டம்பர் முதல் அமிதாப் பச்சன் அந்நிறுவனத்தின் 3.32 லட்சம் பங்குகள் அல்லது 2.45 சதவீத பங்குகளை வைத்து இருந்தார். இருப்பினும் அண்மையில் அதில் சிறிய அளவிலான பங்குகளை விற்பனை செய்து விட்டார். 2023 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி, அவரிடம் 1.47 சதவீத பங்குகள் உள்ளன.
டி.பி. ஓயர்ஸ் நிறுவனம் கடந்த 2017 செப்டம்பர் 21ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. அந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதியன்று ஒரு பங்கு ரூ.75 என்ற விலையில் அந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
கடந்த 20ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.587.70ஆக இருந்தது. இதன்படி பார்த்தால், இந்நிறுவன பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது முதல் இதுவரையிலான காலத்தில் பங்கின் விலை 680 சதவீதம் உயர்ந்துள்ளது.
குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 666 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒராண்டில் மட்டும் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. 1971ல் டி.பி. ஓயர்ஸ் நிறுவனம் ஸ்டீல் கம்பிகள் தயாரிப்பில் இறங்கியது. இன்று இந்த துறையில் முன்னணி நிறுவனமாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தின் ஆண்டு உற்பத்தி திறன் 50,000 டன்னாக உள்ளது. வரும் ஆண்டுகள் ஆண்டு உற்பத்தி திறனை 70,000 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ், சுற்றுச்சூழல் பொறியியல், சிவில் என்ஜினீயரிங்,எரிசக்தி, ஆட்டோமோடிவ் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஸ்டீல் கம்பிகள் மற்றும் பிளாஸ்டிக் பிலிம்ஸ் ஆகியவற்றை இந்நிறுவனம் சப்ளை செய்கிறது.
கடந்த 2021-22ம் நிதியாண்டில் டி.பி.ஓயர்ஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.613.24 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2016-17ம் நிதியாண்டில் ரூ.195.38 கோடியாக இருந்தது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications