ஆனந்த் ரதி வெல்த் நிறுவனம் இந்தியாவின் முன்னணி வங்கி சாரா செல்வ தீர்வு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும், இந்நிறுவனம் நாட்டின் டாப் 3 வங்கி சாரா மியூச்சுவல் பண்ட விநியோகஸ்தர்களில் ஒருவராகும் உள்ளது. இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு, வெல்த் தீர்வுகள், நிதி தயாரிப்பு திட்டங்கள் விநியோகம் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தொடர்ந்து நிலையாக லாபம் ஈட்டி வருகிறது. மேலும், இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் ஆனந்த் ரதி வெல்த் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 630 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை வழங்கியுள்ளது. இதனால் ஆனந்த் ரதி வெல்த் நிறுவன பங்கின் மீது முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரு கண் வைத்து இருப்பர். இந்த சூழந்நிலையில், சில தரகு நிறுவனங்களின் செயலிகளில் ஆனந்த் ரதி வெல்த் நிறுவன பங்கின் விலை இன்று ஒரே நாளில் 50 சதவீதம் சரிந்துள்ளதாக காட்டியது. இதனை பார்த்த உடனே பலரும் வியப்பில் ஆழ்ந்தனர். ஆனால் உண்மையில் பங்கு விலை 50 சதவீதம் குறையவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரூ.4,060.35ஆக இருந்தது. ஆனால், 1:1 போனஸ் சரிசெய்தலுக்கு பிறகு இன்று பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.1,979.95ல் தொடங்கியது. முந்தை வர்த்தக தினத்தின் முடிவு விலை ரூ.2,030.40ஆக காட்டியது. ஆனால் சில தரகு செயலிகளில் நேற்றைய பங்கு விலையில் சரிசெய்யபடாத நிலையை (பழைய விலையான ரூ.4,060.35) காட்டியது. இதனால் அந்த செயலிகளில் ஆன்ந்த் ரதி வெல்த் நிறுவன பங்கு விலை இன்று 50 சதவீதத்துக்கு மேல் குறைந்தது போல் காட்டியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் ஆனந்த் ரதி வெல்த் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.67 சதவீதம் குறைந்து ரூ.1,894.85ல் முடிவுற்றது. அதேசமயம் சில தரகு நிறுவனங்களின் செயலிகளில் ஆனந்த் ரதி வெல்த் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 53.27 சதவீதம் குறைந்து ரூ.1,895.70ல் முடிவுற்றது. முந்தைய வர்த்தக தினத்தின் முடிவு விலையை சரிசெய்யப்படாததே இதற்கு காரணம்.
கடந்த ஜனவரி 13ம் தேதியன்று இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்தது. கடந்த மாதம் 18ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தை ஆகியவற்றிடமிருந்தும் இதற்கான ஒப்புதலை இந்நிறுவனம் பெற்றது. கடந்த மாதம் 21ம் தேதியன்று ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் தனது போனஸ் ஒதுக்கீட்டு குழு மார்ச் 5ம் தேதியை போனஸ் பங்கு வெளியீட்டுக்கான பதிவு தேதியாக அறிவித்தது.
Story written by: Subramanian
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications