Anthropic ஏறிய வேகத்தில் இறங்கிய பங்குகள்.. என்ன நடக்குது..? பங்குச்சந்தை திறக்கும் முன்பே ஷாக்!

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் மையப்புள்ளியாக இருக்கும் ஆந்திரோபிக் நேற்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு பெரிய வெற்றியைப் பதிவு செய்தாலும், அமெரிக்கா பங்குச்சந்தை சந்தை மொத்தமாக நேற்று கவிழ்ந்தது பெரும் ஏமாற்றமாக விளங்குகிறது.

அமெரிக்க சந்தையின் வீழ்ச்சி இந்திய சந்தைக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது, இன்று சென்செக்ஸ் குறியீடு கிட்டத்தட்ட 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நேற்று நடந்த ஒரே நல்ல விஷயம் ஆந்திரோபிக் ஐபிஓ மட்டுமே, ஆனால் இன்று இதுவும் சரியத் துவங்கியுள்ளது பெரும் சோகமாக உள்ளது.

Anthropic ஏறிய வேகத்தில் இறங்கிய பங்குகள்.. என்ன நடக்குது..? பங்குச்சந்தை திறக்கும் முன்பே ஷாக்!

ஆந்திரோபிக் நிறுவனத்தின் ஐபிஓ விலையைக் காட்டிலும் 21 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 111.53 டாலரை தொட்டது, இந்த உயர்வைத் தக்க வைக்க முடியாமல் வர்த்தகம் முடியும்போது 97 டாலருக்கு நேற்று சரிந்தது.

இதேபோல் நேற்றைய வர்த்தகத்தில் நாஸ்டாக், எஸ் அண்ட் பி 500, டாவ் ஜோன்ஸ் குறியீடுகள் 2 சதவீதத்திற்கு மேல் சரிந்த நிலையில், இதன் தாக்கத்தில் இன்று ப்ரீ மார்கெட்டில் ஆந்திரோபிக் பங்குகள் 6 சதவீத சரிவில் உள்ளதால் அமெரிக்க முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Also Read

ஆந்திரோபிக் நிறுவனத்தின் IPO முடிந்து பங்குகள் பட்டியலிடப்படும் முதல் நாளிலேயே, இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் அல்லாத ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளில் சுமார் 10% வரை விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது தான் பெரும் தவறாக முதலீட்டாளர்கள் பார்க்கிறார்கள்.

ஆந்திரோபிக் பங்குகள் நேற்று 111.53 டாலருக்கு உயர்ந்த பின்பு தடாலடியாகச் சரிந்ததிற்கு முக்கிய காரணம் இந்த அனுமதி தான். ஏற்கனவே நிறுவனப் பங்குகளை வைத்திருந்தவர்கள் இந்த அதிரடியான லாபத்தைப் பணமாக்கும் முயற்சியில் விற்பனை செய்துள்ளனர்.

இன்று ஒட்டுமொத்த அமெரிக்க சந்தையும் சரிவுடன் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆந்திரோபிக் பங்குள் வர்த்தகம் திறந்த பின்பு 10 சதவீதம் வரையில் சரிவ வாய்ப்புள்ளது, இதற்கு முக்கிய காரணமாக AMD விளங்குகிறது.

என்விடியா போலவே ஏஎம்டி நிறுவனமும் சீனாவுக்கு மறைமுகமாக சிப்களை விற்பனை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது, இதனால் இன்றும் ஏஐ துறைக்கு எமகண்டமாகவே இருக்கும் என தெரிகிறது. ப்ரீ மார்கெட்டில் என்விடியா 2.67 சதவீதமும், ஏஎம்டி 5.43 சதவீதமும் சரிந்து காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+