இந்த பங்கை வாங்க விட்டு விட்டோமே என்ற நம்மை எண்ண வைக்கும் பல மல்டிபேக்கர் பங்குகள் உள்ளன. அது போன்ற ஒரு மல்டிபேக்கர் பங்கு தான் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் பங்கு. இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் ஆதாயம் கொடுத்துள்ளது.

விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையை சார்ந்த நிறுவனம் தான் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட். ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் மின்னணு உற்பத்தி, ஹார்டுவேர் டிசைனிங், ஆயுத ஒருங்கிணைப்பு மற்றும் ப்ளாட்பார்ம் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.2,270 கோடியாக உள்ளது.
கடந்த மாதம், அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள ஹார்டுவேர் பார்க்கில் ரூ.150 கோடி முதலீட்டில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையை தொடங்க உள்ளதாக அறிவித்தது. இது இந்நிறுவனத்தின் மீதான வளர்ச்சி குறித்த நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 2022 நவம்பர் 2ம் தேதியன்று 52 வார குறைந்த அளவாக ரூ.32.05ஆக சரிந்தது. அதேசமயம் நேற்று அப்பங்கு விலை 52 வார அதிகபட்சமாக ரூ.105.40ஐ எட்டியது. கடந்த 6 மாதத்தில் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை முதலீட்டாளர்களின் செல்வத்தை 213 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் கடந்த ஒராண்டில் இப்பங்கு விலை 365 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications