பங்கு சந்தைகளில் ஏற்ற இறக்கம் என்பது மிக அதிகளவில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் லாபகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 31,, 2023வுடன் முடிவடைந்த கடந்த 23 ஆண்டுகளில் சென்செக்ஸ் 1000% மேலாக ஏற்றம் கண்டு, 58,991.52 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் பல்வேறு நிதி நெருக்கடிகள் என்பது இருந்திருந்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, பணவீக்கம் ஏற்றம், அன்னிய முதலீடுகள் ஏற்றம் மற்றும் அரசியல் பதற்றம் என பலவும் இருந்தாலும், இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
தொடர்ந்து இழப்பு
நீண்டகால நோக்கில் சந்தையானது ஏற்றத்தில் காணப்படும் நிலையிலும் தொடர்ந்து முதலீட்டாளர்கள் நஷ்டத்தினை கண்டு வருகின்றனர். எனினும் பல்வேறு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் தொடர்ந்து இழப்பினை கண்டு வருகின்றனர். ஏன் சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வந்தாலும், முதலீட்டாளர்கள் பெரும்பாலானவர்கள் இழப்பினை மட்டுமே கண்டு வருகின்றனர். அவர்கள் செய்யும் தவறு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பல காரணங்களுக்காக முதலீடு
பலரும் தொடர்ந்து பல்வேறு காரணங்களுக்காக முதலீடுகளை செய்து வருகின்றோம். சில தங்கள் வீட்டிற்காகவும், சிலர் ஓய்காலத்திற்காக முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யும் சிறு தவறு கூட உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆக சரியாக திட்டமிட்டு முதலீடு செய்வது தான் சரியானதொரு விஷயமாக இருக்கும்.
குறுகிய கால நோக்கு
பலரும் சந்தையில் செய்யும் மிகப்பெரிய தவறே குறுகிய காலத்தில் லாபம் பார்க்க நினைப்பது தான். குறுகிய கால இலக்கினை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய நினைப்பர். குறுகிய காலத்தில் ஒரிரு நாள் லாபம் கொடுத்தாலும், தொடர்ந்து இதுபோன்று செய்வதால் செய்த முதலீட்டினையும் இழப்பர். ஆக நீண்டகால நோக்கில் திட்டமிட்டு முதலீடு செய்ய நினைப்பது என்றுமே பலன் அளிக்கலாம்.
பிரித்து முதலீடு செய்வதில்லை
பலரும் முதலீடு செய்வதை பிரித்து துறை வாரியாக முதலீடு செய்யாமல், ஒரே துறையில் முதலீடு செய்வர். இதனால் லாபம் வந்தாலும் பெரியளவில் இருக்கும். நஷ்டம் வந்தாலும் மிக மோசமாக இருக்கும். ஆக இந்த மிகப்பெரிய தவறை செய்யாமல் இருக்கும்பட்சத்தில், உங்கள் முதலீடும் பாதுகாப்பாக இருக்கும். அதனை பிரித்து செய்யும்போது, ஒரு துறையில் நஷ்டம் என்பது வந்தாலும், மற்ற துறைகள் அதனை சரி செய்யும். மொத்தத்தில் ரிஸ்க் என்பது குறையும்.
சரியான நேரத்தை கடைபிடியுங்கள்
முதலீட்டாளர்கள் அவர்களது முதலீட்டில் சரியான நேரத்தை கடை பிடிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் சரியான நேரத்தில் சரியான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அதுவே உங்களுக்கு கிடைக்கும் லாபத்தினை இழக்க நேரிடலாம். அதோடு சந்தையில் ஒரு மோசமான நேரத்தில் சரியாக வெளியேறவும் தயாராக இருக்க வேண்டும். இந்த நேர நிர்வாகம் என்பதை சரியாக தெரிந்து கொண்டாலே நீங்கள் லாபகரமான முதலீட்டாளராக வலம் வர முடியும்.
ஆய்வு செய்ய வேண்டும்
ஒரு பங்கினை வாங்க நினைக்கிறீர்கள் எனில், அதனை சரியாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக அந்த நிறுவனத்தின் பேலன்ஸ் சீட் எப்படியிருக்கிறது. நிர்வாகம் எப்படியிருக்கிறது, அதன் தரம், போட்டித் தன்மை, மற்றும் அது எந்த துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் என தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் துறையின் எதிர்கால தேவை எப்படியிருக்கும் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
எல்லோரும் செய்வதை செய்யாதீர்கள்
பங்கு சந்தையினை பொறுத்தவரையில் சந்தையானது சரிய தொடங்கி விட்டது எல்லோரும் ஒரே நேரத்தில், தங்கள் வசம் உள்ள பங்கினை விற்று வெளியேறுவர். ஆனால் எல்லோரும் செய்வதை போல நீங்களும் செய்யாமல் சந்தையானது சரியும்போது குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கி வைக்கலாம். ஆக மற்றவர்களை பின் தொடராமல் நீங்களாக சொந்தமாக முடிவு எடுக்க வேண்டும்.
உணர்ச்சிகள் வேண்டாம்
ஒரு சிலர் ஒரே நாளில் இவ்வளவு சம்பாதிக்க வேண்டும், அவ்வளவு சம்பாதிக்க வேண்டும் என உணர்ச்சிவசப்பட்டு, மிக தவறான முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுப்பர். ஆக முடிவுகளை சரியான நேரத்தில் முதலீடு செய்வது அவசியமான ஒன்று. ஆக பயம், ஆசை, மூடத்தனமான நம்பிக்கை அடிப்படையில் முதலீடு செய்ய கூடாது.
திறனை மதிப்பிடுங்கள்
பொதுவாக பங்குகளை அதன் சமீபத்திய செயல்திறனை அடிப்படையாக கொண்டு தேர்வு செய்ய கூடாது. அதன் சமீபத்திய செயல்திறனை காட்டிலும், நீண்டகால காலத்திறனை மதிப்பிடுவது அவசியமான ஒன்று.
ஸ்டாப் லாஸ்
ஸ்டாப் லாஸ் ஆர்டர் என்பது பங்கு சந்தையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அம்சமாகும். ஒருவர் ஒரு பங்கினை வாங்கியிருக்கும்போது, அதன் லாபம் வந்தால் புக் செய்வதற்கு ஒரு இலக்கையும், இதே நஷ்டம் வந்தால் அதனை குறிப்பிட்ட விலையில் தடுக்க ஸ்டாப் லாஸையும் நிர்ணயம் செய்யலாம். இதன் மூலம் நஷ்டம் வந்தாலும் குறிப்பிட்ட தொகை தான் நஷ்டம் என தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதனை போடாத சமயத்தில் அதிக நஷ்டத்தினை எதிர்கொள்ள நேரிடலாம்.
அதிக வர்த்தகம் வேண்டாம்
ஒரு சிலர் ஒரு நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆர்டர்களை போட்டு, ஒரு முறை நஷ்டம் ஏற்பட்டால், விட்டதை பிடிக்காமல் போக மாட்டேன் என திரும்ப திரும்ப வணிகம் செய்வர். இது இன்னும் நஷ்டம் அதிகரிக்க வழிவகுக்கும். இதே லாபம் வந்தாலும் இன்னும் லாபம் கிடைக்குமா என பார்ப்பர். இதன் மூலம் நஷ்டத்தினை காணலாம். எல்லாவற்றுக்கு மேலாக நஷ்டம் தவிர அதிகப்படியான கட்டணம், வரி என பலவும் மேலும் நஷ்டத்தினை கொடுக்கும்.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

இந்தியாவில் ஏன் தங்கம் விலை உயர்கிறது? - உலக தங்க கவுன்சில் தலைவர் கொடுக்கும் விளக்கம்

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

தங்கத்தில் முதலீடு செய்யப் போறீங்களா ? இவ்வளவு செஞ்சீங்கன்னா போதும் : ரே டேலியோ கூறும் கணக்கு

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

வெள்ளி 15% சரிவு.. தங்கம் 3% ஏற்றம்! குழப்பத்தில் முதலீட்டாளர்கள் - இப்போது என்ன செய்வது?

தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?

தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!



Click it and Unblock the Notifications