இந்திய பங்குச் சந்தைகளில் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் ஆஷிஷ் கச்சோலியா. அதிக வளர்ச்சி கொண்ட பங்குகளை அடையாளம் காண விரும்பும் முதலீட்டாளர்கள் , ஆஷித் கச்சோலியாவின் போர்ட்ஃபோலியாவில் இடம்பெற்றுள்ள பங்குகளை பார்த்தாலே ஓரளவு யூகித்து கொள்ளலாம்.
ரசாயனங்கள்
ஆஷிஷ் கச்சோலியா அடிப்படை வலுவாக உள்ள, அதிக வளர்ச்சி திறன் கொண்ட மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய வேண்டும் என்ற முதலீட்டு தத்துவத்தை பின்பற்றுகிறார். இதனால் அவரது போர்ட்ஃபோலியோ சந்தை பங்கேற்பாளர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. தற்போது அவர் ரசாயனங்கள் துறையை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது இன்ஃபினியம் பார்மாகெம் நிறுவனத்தில் ஆஷிஷ் கச்சோலியா புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளார். இந்நிறுவனம் அயோடியன் அடிப்படையிலான மருந்து இடைநிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இன்ஃபினியம் பார்மாகெம் நிறுவனத்தில் 4.60 சதவீத பங்குகளை ரூ.21.7 கோடிக்கு வாங்கியுள்ளார். தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.303.75ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.480 கோடியாக இருந்தது.
பங்கின் விலை
2024 ஆகஸ்ட் 2ம் தேதியன்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இன்ஃபினியம் பார்மாகெம் நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.178.05க்கு சென்றது. இருப்பினும் அதற்கு அடுத்த இரண்டே மாதங்களில் இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சத்தை எட்டியது. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.392.50ஐ எட்டியது.
டான்ஃபாக் இண்டஸ்ட்ரீஸில் தனது ரூ.51.3 கோடி மதிப்பிலான பங்குகளை அப்படியே வைத்திருக்கிறார். மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.3,262.50ஆக இருந்தது. கடந்த பிப்ரவரியில் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.3,970.00ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.3,268 கோடியாக உள்ளது.
யாஷா இண்டஸ்ட்ரீஸ்
அதேசமயம், யாஷா இண்டஸ்ட்ரீஸில் தனது பங்குகளை குறைத்துள்ளார். தற்போது இந்நிறுவனத்தில் ஆஷிஷ் கச்சோலியா கைவசம் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ.83.1 கோடியாக (3.90 சதவீதம்) குறைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,744.15ல் நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி 5ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.2,330ஐ எட்டியது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.2,092 கோடியாக உள்ளது.
கேட்பாரற்று கிடக்கும் முகேஷ் அம்பானி நிறுவன பங்குகள்.. சும்மா கிடக்கும் ரூ.11,000 கோடி..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications