ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் உரிமை கோரப்படாமல் உள்ளன உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உரிமை கோரப்படாத பங்குகள் என்பது நீண்ட காலத்துக்கு சரியான உரிமையாளரால் தீவிரமாக நிர்வகிக்கப்படாத அல்லது உரிமை கோரப்படாத பங்கு முதலீடுகளை குறிக்கின்றன. பங்குகள் மற்றும் டிவிடெண்டுகள் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகள் உரிமை கோரப்படாமல் இரு்தால் அது உரிமை கோரப்படாத பங்குகளை மாறிவிடும்.
உரிமை கோரடப்படாத பங்குகள்
அதன் பிறகு இந்த உரிமை கோரடப்படாத பங்குகள் அரசாங்கத்தின் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு (ஐஇபிஎ.ப்) மாற்றப்படும். முதலீட்டாளர்கள் இன்னும் பங்குகளை பிசிக்கல் வடிவத்தில் வைத்திருப்பது, முதலீடுகள் குறித்த மறதி, விழிப்புணர்வு இல்லாமை, முதலீட்டாளர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்க தவறியது, நாமினி இல்லாத டீமேட் கணக்குகள் போன்ற பல்வேறு காரணங்களால் பங்குகள் உரிமை கோரப்படாத பங்குகளாக மாறி விடுகின்றன.

தற்போது முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியத்தில், பெரிய தொகையில் உரிமை கோரப்படாத பங்குகள் குவிந்து கிடக்கின்றன. முதலீட்டாளர்கள் அல்லது அவர்களது சட்டப்பூர்வ வாரிசுகள் அவற்றை திரும்ப பெற முடியும். முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில், ரூ.11,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள் உரிமை கோரப்படாமல் உள்ளன உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியம்
இது தொடர்பாக செல்வ ஆலோசனை நிறவனமான கம்ப்ளீட் சர்க்கிள் கன்சல்டன்ட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி குர்மீத் சாதா எனது சமூக வலைதளமான எக்ஸில், முதலீட்டாளர் கல்வி பாதுகாப்பு நிதியத்தில், 7.4 கோடி உரிமை கோரப்படாத ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.11,000 கோடியாகும். இதில் டெல்லி என்சிஆரில் மட்டும் ரூ.1,100 கோடி பங்குகள் உள்ளன, அவை உரிமை கோரப்படாதவை.
லார்சன் அண்ட் டூப்ரோ (ரூ.2,000 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.1,300 கோடி) மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் (ரூ.500 கோடி) ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உரிமை கோரப்படாமல் இந்த நிதியத்தில் தேங்கி கிடக்கின்றன. இதுதவிர, உரிமை கோரப்படாத ரூ.2,700 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளும் இந்த நிதியத்தில் உள்ளது. தயவு செய்து உங்கள் பங்குகளை டீமேட் செய்து, அனைத்து மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கும் நாமினி மற்றும் வங்கி விவரங்களை புதுப்பிள்துள்ளதை உறுதி செய்யவும்.
தொழில்முறை நிபுணர்கள்
உங்களுக்கு உரிமையான உரிமை கோரப்படாத பங்குளை திரும்ப பெற, உங்கள் குடும்ப கணக்குகளை தடயவியல் முறையில் தேடி, தொழில்முறை நிபுணர்களின் உதவியை நாடுங்கள் என்று பதிவு செய்து இருந்தார்.
16 நாளில் 30 சதவீதம் வரை உயர்ந்த ரயில்வே பங்குகள்.. முதலீட்டாளர்கள் ஹேப்பியோ ஹேப்பி..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications