இந்திய பங்குச் சந்தைகளில் இந்த மாதம் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் ஏற்பட்டது முதல், உள்நாட்டை சேர்ந்த பாதுகாப்பு துறையை சேர்ந்த பங்குகளின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. அதேசமயம், ரயில்வே துறையை சேர்நத பங்குகளும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளன.
ரயில்டெல், ஆர்விஎன்எல், ஐஆர்எஃப்சி, இர்கான் இன்டர்நேஷனல் உள்பட ரயில்வே துறையை சேர்ந்த பங்குகள் 30 சதவீதம் வரை உயர்ந்தன. இந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, புதிய வர்த்தக ஒப்பந்தங்களை நிறுவனங்கள் பெற்றது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

ரயில்டெல்
ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்கு விலை இந்த மாதத்தில் இதுவரை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இப்பங்கின் விலை ரூ.312லிருந்து ரூ.384ஆக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது, புதிய ஆர்டர்கள் பெற்றது போன்ற காரணங்களால் இந்நிறுவன பங்கின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
RITES
முன்னணி போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆலோசனை மற்றும் பொறியியல் நிறுவனம் RITES.மே மாதத்தில் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் 150க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 6.2 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.141 கோடியாக உயர்ந்துள்ளது. இது போன்ற காரணங்களால் இப்பங்கின விலை ஏற்றம் கண்டுள்ளது.
இர்கான் இன்டர்நேஷனல்
மே மாதத்தில் இதுவரை இர்கான் இன்டர்நேஷனல் பங்கு விலை 23 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவனம் தொடர்ச்சியாக அதிகளவில் வர்ததக ஒப்பந்தங்களை பெற்றதுதான். உதாரணமாக, கேரள மாநில ஐடி உள்கட்டமைப்பிலிருந்து ரூ.187 கோடி மதிப்பிலான ஆர்டர், அருணாசல பிரதேசத்தில் உள்ள டாடோ-1 நீர் மின்சார திட்டத்தில் சிவில் பணிகளுக்காக வடகிழக்கு மின்சார கழகத்திடமிருந்து ரூ.458 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்களை பெற்றது.
ரயில் விகாஸ் நிகாம்
இந்திய ரயில்வேயிடமிருந்து பல ஆர்டகளை பெற்றதால் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (ஆர்விஎன்எல்) பங்கின் விலை ஏற்றம் கண்டது. இந்த மாதத்தில் இதுவரையிலான காலத்தில் ரயில் விகாஸ் நிகாம் பங்கின் விலை 17 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐஆர்எஃப்சி
இந்த மாதத்தில் இதுவரையிலான காலத்தில் இந்திய ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஐஆர்எஃப்சி) பங்கு முதலீட்டாளர்களுக்கு 12 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,682 கோடி ஈட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் என்டிபிசி-க்கு ரூ.5,000 கோடி கடனை வழங்குவதற்கான மிக குறைந்த ஏலதாரராக இந்நிறுவனம் உருவெடுத்தது.
இந்த பங்குகளை தவிர, இதர ரயில்வே தொடர்பான, பொத்துறை நிறுவனங்களான பிஇஎம்எல் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய நிறுவன பங்குகள் முறையே 16 மற்றும் 8 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளன.
சரிவு
இதற்கு முன்பு, 2023 மே முதல் 2024 ஜூலை வரை ரயில்வே துறையை சேர்ந்த பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை கண்டன. அவற்றின் மதிப்பீடுகளை நிலைநிறுத்த முடியாது அளவுக்கு சென்றது. மேலும் ஆர்டர் வரவில் ஏற்பட்ட மந்தநிலை போன்ற காரணங்களால் முதலீட்டாளர்களை இப்பங்குகளிலிருந்து பின்வாங்க வைத்தது. இதன் விளைவாக இப்பங்குகளின் விலை உச்சத்திலிருந்து கடுமையான இறக்கத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்துக்கு வைச்ச செக்.. மாட்டிக் கொண்ட சீனா.. இந்தியாவுக்கு ரூ.1,000 கோடி வணிகம் லாபம்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications