இவரை பார்த்து கத்துக்கணும்.. கம்மி விலையில் பங்குகளை வாங்கி போட்ட ஆஷிஷ் கச்சோலியா..!

இந்திய பங்குச் சந்தைகளில் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களில் ஒருவர் ஆஷிஷ் கச்சோலியா. அடிப்படை வலுவாக உள்ள, அதிக வளர்ச்சி திறன் கொண்ட மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட நிறுவன பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய வேண்டும் என்ற முதலீட்டு தத்துவத்தை பின்பற்றுகிறார். அதிக வளர்ச்சி கொண்ட பங்குகளை அடையாளம் காண விரும்பும் சந்தை பங்கேற்பாளர்கள், ஆஷித் கச்சோலியாவின் போர்ட்ஃபோலியாவில் இடம்பெற்றுள்ள பங்குகளை பார்த்தாலே ஓரளவு யூகித்து கொள்ளலாம். இதனால் அவரது போர்ட்ஃபோலியோ சந்தை பங்கேற்பாளர்களால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் இருந்த கடந்த நான்காவது காலாண்டில், தாமஸ் ஸ்கார்ட் உள்ளிட்ட 5 நிறுவன பங்குகளில் ஆஷிஷ் கச்சோலியா முதலீடு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனையடுத்து அந்த பங்குகள் முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. அந்த பங்குகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

இவரை பார்த்து கத்துக்கணும்.. கம்மி விலையில் பங்குகளை வாங்கி போட்ட ஆஷிஷ் கச்சோலியா..!

தாமஸ் ஸ்காட் (இந்தியா)
மைக்ரோகேப் பங்கான தாமஸ் ஸ்காட் நிறுவனம், மலிவு விலையில் ஆடைகளை வடிவமைத்து, தயாரித்து, சந்தைப்படுத்தும் ஒரு நடுத்தர பிரீமியம் ஆண்கள் ஆடை ஃபேஷன் நிறுவனமாகும். கடந்த நான்காவது காலாண்டில் ஆஷிஷ், இந்நிறுவனத்தின் 2.4 சதவீத பங்குகளை வாங்கினார். இந்த ஆண்டி்ல் இதுவரை இப்பங்கின் விலை 38 சதவீதம் சரிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.315.15ஆக இருந்தது.

கான்கார்ட் கண்ட்ரோல்
கான்கார்ட் கண்ட்ரோல் நிறுவனம் ஆர்டிஎஸ்ஓவால் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு மின்சார மற்றும் மின்னணு பொருட்கள் தயாரிப்பாளர். இந்த ஆண்டில் இப்பங்கின் விலை 30 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளது. இருப்பினும் கடந்த நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் 1.2 சதவீத பங்குகளை ஆஷிஷ் கச்சோலியா வாங்கினார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.1,207.70ஆக இருந்தது.

ஸ்ரீ ஓஎஸ்எஃப்எம் இ மொபிலிட்டி
ஸ்ரீ ஓஎஸ்எஃப்எம் இ மொபிலிட்டி நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணியாளர் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகிறது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தின் 3.6 சதவீத பங்குகளை அவர் வாங்கியுள்ளார். தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.136.50ஆக இருந்தது.

குவாலிடெக் லேப்ஸ்
குவாலிடெக் லேப்ஸ் நிறுவனம் வாகன பொருட்கள், உதிரி பாகங்கள், அசெம்பிளிகள் மற்றும் முழு வாகனங்களையும் மதிப்பிடுவதற்கான முழுமையான சோதனை தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை ஆஷிஷ் வாங்கினார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.346.95ஆக இருந்தது.

Quadrant Future Tek
அண்மையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட Quadrant Future Tek நிறுவனம் தர மேலாண்மை அமைப்புகளுக்கு சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புதுமை சார்ந்த நிறுவனமாகும். ஆஷிஷ் கச்சோலியா கடந்த நான்காவது காலாண்டில் இந்நிறுவனத்தில் 1.9 சதவீத பங்குகளை வாங்கினார். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.526.20ஆக இருந்தது.

பிரியாணி கடையை வளைத்து போடும் தேவயானி.. விறுவிறுவென ஏறிய பங்கு விலை..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+