கேஎஃப்சி, பீட்சா ஹட் மற்றும் கோஸ்டா காஃபி போன்ற உணவு சங்கிலித்தொடர் கடைகளை நடத்தி வரும் துரித சேவை உணவக நிறுவனம் தேவயானி இன்டர்நேஷனல். இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, "பிரியாணி பை கிலோ" பிராண்ட் உணவகத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேவயானி இன்டர்நேஷனல் அறிவித்தது.
இதனையடுத்து நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே தேவயானி இன்டர்நேஷனல் நிறுவன பங்கின் விலை 6.5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.176.20 வரை சென்றது. ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம்தான் "பிரியாணி பை கிலோ" என்ற பிராண்டின் கீழ் உணவகங்களை நடத்தி வருகிறது. ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் நாடு முழுவதுமாக 40க்கும் மேற்பட்ட நகரங்களில் 106 உணவகங்களை நடத்தி வருகிறது

தற்போது தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம், "பிரியாணி பை கிலோ" பிராண்டின் கீழ் இயங்கும் உணவகங்களை கையகப்படுத்துவதற்காக ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவன பங்குகளை முன்னுரிமை அடிப்படையில் வாங்க உள்ளது. இந்த திட்டத்தை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்காக, நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் ஏப்ரல் 24(வியாழக்கிழமையன்று) நடைபெற உள்ளது என்று தேவயானி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம் "பிரியாணி பை கிலோ" பிராண்டை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, தரகு நிறுவனமான எம்கே குளோபல் நிறுவனம், தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம் குறித்த தனது தரமதிப்பீட்டை வாங்கலாம் என்று அதிகரித்துள்ளது. மேலும் இபபங்கின் இலக்கு விலையை ரூ.200ஆக உயர்த்தியுள்ளது.
எம்கே குளோபல் நிறுவனத்தின் தேவன்ஷு பன்சால் கூறுகையில், அதன் வருவாயுடன் கூடுதலாக, தேவயானியின் செயல்பாட்டு சிறப்பு, ஒருங்கிணைப்புகள் மற்றும் ஆர்ஜே கார்ப் குழுமத்தின் கவர்ச்சிகரமான மதிப்பீடுகளில் கையகப்படுத்துதல்களை முடிக்கும் திறன் ஆகியவை வலுவான மதிப்பு உருவாக்கத்துக்கு ஒரு சான்றாக அமைகின்றன என்று தெரிவித்தார்.
கோடக் ஈக்விட்டிஸ் ஆய்வாளர்கள் கூறுகையில், ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டி கடந்த 2024-25ம் நிதியாண்டில் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் 106 உணவகங்கள் வாயிலாக சுமார் ரூ.300 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டியின் 106 உணவகங்களில் 65-70 கிளவுட் கிச்சன்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தனர்.
தேவயானி இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.4.31 கோடி ஈட்டியுள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.872.59 கோடியாக இருந்தது. மேலும் 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.0.04ஆக இருந்தது.
மே 15ம் தேதி முதல் ஆரம்பம்.. இனி மாதந்தோறும் வேலையின்மை டேட்டா வெளியாகும்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications