பங்கு விலையோ ரூ.100க்கும் குறைவு.. ஒரே ஒரு செய்தியால் தடாலடியாக உயர்ந்த பார்மா நிறுவன பங்கு..!

மருந்து துறையை சேர்ந்த நிறுவனம் ஆஸ்டல் லேபரட்டரீஸ் லிமிடெட். இந்நிறுவனம் மருந்துகள் மற்றும் பல்க் டிரக்ஸ் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ரூ.100க்கு குறைவான இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு கணிசமான வருமானத்தை கொடுத்துள்ளது.

வருவாய்
ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. நிதி நிலை முடிவுகள் எதீர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.23.5 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 92 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.12.2 கோடி மட்டுமே ஈட்டியிருந்தது.

பங்கு விலையோ ரூ.100க்கும் குறைவு.. ஒரே ஒரு செய்தியால் தடாலடியாக உயர்ந்த பார்மா நிறுவன பங்கு..!

2025 மார்ச் காலாண்டில் ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2.74 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 389 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.56 லட்சம் மட்டுமே ஈட்டியிருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் 172 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1.55ஆக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் ரூ.0.57ஆக இருந்தது.

சந்தை எதிர்பார்ப்பு
சந்தை எதிர்பார்ப்புகளை காட்டிலும் கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தால், பங்குச் சந்தையில் ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவன பங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.97.99 வரை உயர்ந்தது.

இருப்பினும், பின்னர் இப்பங்கின் விலை விறுவிறுவென சரிவு கண்டது. பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவன பங்கின் விலை 9.5 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டு ரூ.84.27 வரை சென்றது. மதியம் 2.30 மணி அளவில், இப்பங்கின் விலை 5.57 சதவீதம் குறைந்து ரூ.88.00 என்ற அளவில் இருந்தது.

புதிய உச்சம்
2024 மே 21ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 53 வார குறைந்தபட்சமான ரூ.42.92க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. கடந்த செப்டம்பர் 10ம் தேதியன்று பங்குச் ச்நதையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.131.70ஐ எட்டியது.

கடந்த ஓராண்டில் ஆஸ்டல் லேபரட்டரீஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 112.07 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.

துணிந்து பணத்தை போட்ட ஆஷிஷ் கச்சோலியா.. இன்ஃபினியம் பார்மாகெம் உங்ககிட்ட இருக்கா?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+