50%க்கு மேல் லாபம் தரப்போகும் நிதி நிறுவன பங்கு: ஐசிஐசிஐ பரிந்துரை செய்யும் NBFC ஷேர்..!!

இந்திய பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சில நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் தருகின்றன. இதனால் தான் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன்பு அது எந்த துறையில் உள்ளது., அதன் நிதி நிலைமை என்ன என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்திய பங்குச்சந்தையில் ஒரு நிதி நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தரும் என பிரபல முன்னணி தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வங்கி அல்லாத நிதி நிறுவனமான Aye Finance பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்த பங்கின் விலை சுமார் 80 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருந்தாலும், மேலும் 59% வரை உயர வாய்ப்புள்ளது என கணித்துள்ளது.

50%க்கு மேல் லாபம் தரப்போகும் நிதி நிறுவன பங்கு: ஐசிஐசிஐ பரிந்துரை செய்யும் NBFC ஷேர்..!!

Aye Finance என்பது குர்குவானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு சிறு கடன் நிறுவனமாகும். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இதன் பங்க மதிப்பு 82% வரை உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 88 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலை இன்று 177 ரூபாயாக உள்ளது. கடந்த, ஜூலை 21 அன்று இது 52 வார உச்ச மதிப்பாக ஒரு பங்கின் விலை 197.95 ரூபாயை எட்டியது.

இந்திய பங்கு சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், இந்த பங்கு மதிப்பு உயர்ந்து வருகிறது. ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் இந்த பங்கின் இலக்கு விலையை 285 ரூபாயாக ஆக நிர்ணயித்துள்ளது. அப்படி என்றால் இன்றைய மதிப்பை விட 59% வரை உயரும் என கணித்துள்ளது.

Also Read

இந்தியாவில் சிறு, குறு கடன் சந்தையில் ஐ ஃபைனான்ஸ் நிறுவனம் மிக வலிமையான பிடியை கொண்டுள்ளது. குறிப்பாக 1.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான கடன் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்நிறுவனம் தனித்துவமாக செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. பெரும்பாலான போட்டியாளர்கள் 1.5 லட்சத்திற்குக் கீழோ அல்லது 5 லட்சத்திற்கு மேலோ வழங்கும் நிலையில், இந்த இடைவெளியை இந்நிறுவனம் வெற்றிகரமாக நிரப்புகிறது. எனவே இதன் வருவாய் உயர்வதாக தெரிவிக்கிறது.

Recommended For You

2020ஆம் நிதியாண்டு முதல் 2026ஆம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் இதன் ஒட்டுமொத்த சொத்து மேலாண்மை வளர்ச்சி 26% என இருக்கிறது, பொதுவாக இது NBFC பிரிவில் அதிகம் என கூறியுள்ளது. தற்போது இந்நிறுவன பங்கில் 66% சில்லறை முதலீட்டாளர்கள் வசமே உள்ளது, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 15% பங்குகளை சொந்தமாக வைத்துள்ளன. அதே போல உள்நாட்டு நிறுவனங்களும் கணிசமான பங்குகளை வாங்கி வைத்துள்ளன.

இந்தியாவில் கடன் சந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கடன் வழங்கும் பிரிவில் செயல்படும் நிதி நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சியை பெறுகின்றன.அந்த வகையில் ஐசிஐசிஐ கணிப்பின் படி இந்த நிறுவன பங்கு 59% வரை உயரும் என்றால் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் உங்களுக்கு 1.59 லட்சமாக திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+