ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 1,300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது. கடந்த 10 வருட காலத்தில் மும்பை பங்குச்சந்தை ஜூலை மாதத்தில் சிறப்பான வர்த்தகப் பெற்றும், ஆகஸ்ட் மாதத்தில் இழப்பைச் சந்திப்பது இயல்பாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த முறை பிரச்சனை கொஞ்சம் பெரியதாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. காரணம் அமெரிக்கா வட கொரியா நாடுகளுக்கு மத்தியிலான பிரச்சனை சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை
இதேகாலக்கட்டத்தில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் ப்ளூ சிப் நிறுவனங்கள் மோசமான ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பங்குச்சந்தை கூடுதல் சரிவிற்குத் தள்ளியுள்ளனர்.
ஆனால் நிறுவனங்களோ இந்தச் சரிவிற்கு ஜூலை 1 ஆம் தேதி அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி-யை காரணம் காட்டுகிறது.
நுகர்வோர் நிறுவனங்கள்
நுகர்வோர் சந்தையில் இருக்கும் நிறுவனங்கள் பொதுவாகச் சந்தையின் தேவைக்கும் உபரி தேவைக்கும் எப்போதுமே கூடுதலான இருப்பை வைத்திருக்கும். ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்படும் நிலையில் வரி விதிப்புகளின் மாற்றம் செய்யப்படும் காரணத்தால் நிறுவனங்கள் தங்களது இருப்பை அதிகளவில் குறைத்தது.
இதன் காரணமாக நுகர்வோர் நிறுவனங்களின் 2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டான ஜுன் காலாண்டு முடிவில் மோசமான முடிவுகளைக் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
10 நிறுவனங்கள்
இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் 10 ப்ளூ சிப் நிறுவனங்கள் ஜிஎஸ்டி-யை காரணம் காட்டியுள்ளது. இதனால் நிறுவனத்திற்குப் பாதிப்பு இல்லையென்றாலும், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 10 நிறுவனங்கள் குறித்தே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
பிரிட்டாணியா இண்டஸ்ட்ரீஸ்
எப்எம்ஜிசி துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிரிட்டாணியா இண்டஸ்ட்ரீஸ் ஜூன் காலாண்டு லாபத்தில் 1.41 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது. இதன் மூலம் இக்காலாண்டில் 216.12 கோடி ரூபாய் மட்டுமே லாபமாகப் பெற்று இருந்தது.
ஐடிசி
ஐடிசி நிறுவனம் இக்காலாண்டில் 7.37 சதவீத அதிக லாபத்தைப் பெற்று இருந்தாலும், இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவனத்தின் சிகரெட் விற்பனை அதிகரித்துள்ளதே.
ஆனால் இந்நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்களின் விற்பனை ஜிஎஸ்டி மூலம் அதிகளவிலான பாதிப்பை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டாபர் இந்தியா
இருப்பைக் குறைத்த காரணத்தால் டாபர் இந்தியா நிறுவனத்தின் லாபம் 9.80 சதவீதம் வரை சரிந்துள்ளது.
ஈமாமி
ஜிஎஸ்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இருப்பைக் குறைத்த காரணத்தால் வர்த்தகப் பாதிப்பாலும் ஈமாமி நிறுவனத்தின் மொத்த லாபம் 98.16 சதவீதம் வரையிலான சரிவை சந்தித்துள்ளது.
ஏசியன் பெயின்ட்ஸ்
தொடர் வர்த்தக உயர்வில் இருந்த ஏசியன் பெயின்ட்ஸ் RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் அதிகளவிலான வர்த்தகப் பாதிப்பை சந்தித்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 20.23 சதவீதம் வரை சரிந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா
ஜிஎஸ்டி மாற்றத்தின் மூலம் ஆட்டொமொபைல் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா மொத்த லாபத்தில் சுமார் 20 சதவீத சரிவுடன் 799 கோடி ரூபாய் லாபமாகப் பெற்றுள்ளது.
மாருதி சுசூகி
உட்பொருட்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி மாற்றத்தால் ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மாருதி சுசூகி நிறுவனத்தின் லாபத்தை வெறும் 4 சதவீதமாக மட்டுமே உயர்த்தியது.
அப்பலோ டையர்ஸ்
ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 72 சதவீதம் சரிந்து வெறும் 88.3 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் லிமிடெட்
டெக்ஸ்டைல் மற்றும் ஆடை நிறுவனமான அரவிந்த் லிமிடெட் ஜூன் காலாண்டில் 22.55 சதவீதம் லாப சரிவை சந்தித்தது. இது ஆதித்தியா பிர்லா குழுமத்தின் கிளை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
லூபின்
பார்மா துறையின் முன்னணி நிறுவனமாக இருக்கும் லூபின் நிறுவனம் கடந்த வருடத்தை ஒப்பிடும்போதும் ஜூன் காலாண்டில் 59.40 சதவீதம் குறைவான லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications