5 வருடத்தில் பல மடங்கு லாபம்.. பஜாஜ் கொடுத்த சூப்பர் சான்ஸ்.. நீங்க வாங்கியிருக்கீங்களா..!

இந்திய பங்கு சந்தையானது கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. குறிப்பாக இன்று வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இப்படி அனுதினமும் ஏற்றம் கண்டு வரும் சந்தைக்கு மத்தியில், பல பங்குகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. பல பங்குகள் அதனதன் 52 வார உச்சத்தினையும் தொட்டு வருகின்றன.

அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் பங்கானது பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனங்களை பற்றித் தான்.

நல்ல லாபம் கொடுத்த பங்குகள்

நல்ல லாபம் கொடுத்த பங்குகள்

இந்த இரண்டு பங்குகளுமே கடந்த புல் மார்கெட்டில் நல்ல லாபம் கொடுத்து வருகின்றன. சொல்லப்போனால் நடப்பு ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்குகளில் இதுவும் ஒன்று. ஏனெனில் நடப்பு ஆண்டில் பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் லாபமானது 100% மேலாக அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் லாபமானது 50% அதிகமாகும்.

பல மடங்கு ஏற்றத்தில் பஜாஜ் பைனான்ஸ்

பல மடங்கு ஏற்றத்தில் பஜாஜ் பைனான்ஸ்

குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் பஜாஜ் பைனான்ஸின் பங்கு விலையானது 7.2 மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 2016 காலகட்டத்தில் வெறும் 1,100 ரூபாய் என்ற லெவலில் இருந்த பங்கு விலையானது, செப்டம்பர் 2021ல் 7,800 ரூபாய் என்ற லெவலில் வர்த்தகமாகி வருகிறது.

பஜாஜ் பின்செர்வ் நிலவரம்

பஜாஜ் பின்செர்வ் நிலவரம்

இதே மற்றொரு புறம் பஜாஜ் பின்செர்வ் நிறுவனத்தின் பங்கு விலையானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. உதாரணத்திற்கு செப்டம்பர் 2016ல் 2,900 ரூபாயாக இருந்த அதன் பங்கு விலை இன்று அதன் மதிப்பு சுமார் 18,000 ரூபாயாகும்.

இன்னும் அதிகரிக்கலாம்

இன்னும் அதிகரிக்கலாம்

இதற்கிடையில் இந்த பங்கின் விலையானது இனிவரும் காலத்திலும் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்து வருகின்றனர். குறிப்பாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்னும் அதிகரிக்கும் என்று தரகு நிறுவனங்கள் கணித்து வருகின்றன. இது 2023 ஆம் நிதியாண்டில் 8,950 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் காணலாம் என்றும் கணித்துள்ளனர்.

பங்கு விலை அதிகரிக்கும்

பங்கு விலை அதிகரிக்கும்

இதே பஜாஜ் பின்செர்வ் பங்கு விலையானது 20,200 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரிக்கலாம் என்றும் தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன. இது அதிகரித்து வரும் இன்சூரன்ஸ் சம்பந்தமான வணிகம், நிதிநிறுவன வணிகம், லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் வணிகங்கள் தொடர்ச்சியாக மேம்பட்டு வரும் நிலையில், இதன் வருமானமும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இந்த பங்குகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இனியும் விலை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

மாபெரும் வளர்ச்சி

மாபெரும் வளர்ச்சி

மற்றொருபுறம் இந்த நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் மீதான கடன் வணிகம் என்பது முக்கிய சேவையாக இருந்து வருகின்றது. இது தவிர, ஹவுசிங் கடன், சிறு குறு தொழில் கடன் வசதி உள்ளிட்ட பலவும் வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது மேற்கொண்டு நன்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் செயல்பாட்டு திறன் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே காணப்படுகின்றது.

இது ஜாக்பாட் தான்

இது ஜாக்பாட் தான்

குறிப்பாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் வணிகம், பஜாஜ் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனமான பஜாஜ் ஜெனரல் இன்சூரன்ஸ் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளும் மிக வேகமான வளர்ச்சியினைக் கண்டு வருவதால், இந்த நிறுவனங்களின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக வர்த்தகர்கள் இந்த பங்குகளில் கவனம் செலுத்தலாம் என்று தரகு நிறுவனங்கள் கணித்துள்ளனர். மொத்தத்தில் இந்த பங்குகளை வைத்துள்ள முதலீட்டாளர்களுக்கு இது ஜாக்பாட் தான்.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று வர்த்தக முடிவில் 1.34% சரிவினைக் கண்டு, 7,793.40 ரூபாயாக NSEயில் முடிவடைந்துள்ளது. இதே BSEயில் 1.30% குறைந்து, 7,794.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இதே பஜாஜ் ஃபின்செர்வ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று வர்த்தக முடிவில் 0.12% அதிகரித்து, 18,526 ரூபாயாக NSEயில் முடிவடைந்துள்ளது. இதே BSEயில் 0.11% அதிகரித்து, 18,540 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+