பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸில் 2 சதவீதம் பங்குகளை டிசம்பர் 2ஆம் தேதியன்று திறந்த சந்தையில் விற்றது. இந்த பிளாக் டீல் மூலம் 16.66 கோடி பங்குகள் ஒவ்வொன்றுக்கு 95.31 ரூபாய்க்கு விற்கப்பட்டு 1,588 கோடி ரூபாய் நிதியை திரட்டியது.
இந்த பங்கு விற்பனை மூலம் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 52 வார சரிவை தொட்ட நிலையில், இன்று சரிவில் இருந்து மீள துவங்கியுள்ளது. இந்த மீட்சியால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகள் தொடர்ந்து உயருமா..? பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் ஏன் பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளை விற்பனை செய்தது..? போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் தெரிந்துக்கொள்வது மூலம் சரியான கணிப்புடன் இப்பங்குகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு உதவும்.

இது குறைந்தபட்ச பொது பங்குதாரர் நிலை (MPS) விதிமுறைகளை நிறைவேற்றும் பகுதியாகும். சாதாரண முதலீட்டாளர்களுக்கு இது "பெரிய நிறுவனங்கள் பங்குகளை விற்கும்போது சந்தை பாதிக்குமா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸின் மொத்த பங்கு மூலதனத்தில் அதன் தாய் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் சுமார் 88.7 சதவீதம் பங்குகளை கொண்டிருந்தது. டிசம்பர் 2ஆம் தேதி பிளாக் டீல் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2 சதவீத பங்குகள் விற்கப்பட்டது மூலம் மொத்த பங்கு மூலதன இருப்பு 86.7 சதவீதமாக குறைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் இப்பங்குகளை விற்க முக்கிய காரணம் MPS விதிமுறை. ஆம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள எந்தொரு நிறுவனமாக இருந்தாலும் சரி அதன் குறைந்தபட்சம் 25 சதவீதம் பங்குகளை பொது பங்குதாரர்களிடம் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த விதிமுறையை நிறைவேற்றும் நோக்கத்தில் பஜாஜ் பைனான்ஸ் தனது கையிருப்பில் இருந்த 88.7 சதவீத பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்குகளில் 2 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
இந்த பங்கு விற்பனைக்கு பிறகு பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் பங்கு விலை 9 சதவீதம் சரிந்து 52 வார குறைந்த அளவான 94.90 ரூபாயைத் தொட்டது. டிசம்பர் 2ஆம் தேதி வர்த்தக முடிவில் 7.34 சதவீதம் குறைந்து 97.15 ரூபாயில் முடிந்தது.
ஆனால் டிசம்பர் 3 அன்று மீண்டும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற்று 1.24 சதவீதம் உயர்ந்து 98.20 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. பஜாஜ் பைனான்ஸ் பங்கு 0.47 சதவீதம் குறைந்து 1,020.45 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. இது சந்தையில் பங்கு விற்பனை அறிவிப்புகள் விலையை பாதிப்பதை காட்டுகிறது.
SEBI விதிமுறைகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 சதவீதம் பங்குகளை பொது மக்களுக்கு விற்க வேண்டும். பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் இதை நிறைவேற்ற இந்த விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனை மூலம் கிடைத்த நிதி பஜாஜ் பைனான்ஸ்-க்கு கூடுதல் நிதி வலிமையை அளிக்கும்்.
இந்த விற்பனை பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸின் IPO-க்குப் பிறகு நடந்தது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் 2024 செப்டம்பர் மாதம் ஐபிஓ வெளியிட்ட நிலையில் இதுவரையில் பட்டியலிடப்பட்ட விலையில் இருந்து சுமார் 40 சதவீதம் சரிந்துள்ளது, 2025 ஆம் ஆண்டில் 23 சதவீதம் சரிந்து காணப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications