பேட்டா இந்தியா கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. முதலீட்டாளர்களுக்கு இது பொற்காலம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீபத்திய காலமாக பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக, தொடர்ச்சியாக பல நிறுவனங்களும் டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்து வருகின்றன.

 

பேட்டா இந்தியா நிறுவனம் டிவிடெண்ட் பற்றிய பரிந்துரையை கொடுத்துள்ளது.

எவ்வளவு டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இன்றைய பங்கின் விலை எவ்வளவு? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3Dசென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D

டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு

டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பு

பேட்டா இந்தியா 2021 - 2022ம் நிதியாண்டிற்கான டிவிடெண்டாக, ஒரு பங்குக்கு 1090% அல்லது 54.50 ரூபாய் டிவிடெண்டினை பரிந்துரை செய்துள்ளது. இதில் ஸ்பெஷல் டிவிடெண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 12,2022 நடக்கவுள்ள 89வது வருடாந்திர குழு கூட்டத்தில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது அறிவிக்கலாம்?

எப்போது அறிவிக்கலாம்?

ஒரு வேளை எதிர்பார்க்கப்பட்டதை போல டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டால், இது ஆகஸ்ட் 23, 2022 அன்று அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவிடெண்ட் அறிவிப்பில் ஒரு முறை அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் டிவிடெண்டாக 50.50 ரூபாய் சேர்த்து, 54.50 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் என்ன செய்கிறது?
 

நிறுவனம் என்ன செய்கிறது?

பாட்டா இந்தியா இந்தியாவின் முன்னணி காலணி நிறுவனமாகும். இது மார்ச் 2022காலாண்டில் 2 மடங்கிற்கும் மேலாக ஒருங்கிணைந்த நிகர லாபம், 62.96 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் விற்பனையானது அதிகரித்த நிலையில், இது வருவாய் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இதன் நிகர லாபம் 29.47 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வருவாய் விகிதம்

வருவாய் விகிதம்

இதன் செயல்பாட்டின் மூலம் கிடைத்த வருவாய் விகிதமானது 12.77% அதிகரித்து, 665.24 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 589.90 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தொடர்ந்து விரிவாக்க பணிகளை செய்து வருகின்றது. இது வருவாய் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம். இது குறிப்பாக டயர் 3 - 5 நகரங்களில் விரிவாக்கம் செய்து வருகின்றது. இது மேற்கொண்டு இப்பங்கு விலையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பங்கு விலை என்ன?

இன்றைய பங்கு விலை என்ன?

என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 2.28% குறைந்து, 1706 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவரையில் இப்பங்கின் உச்சவிலை 1765.80 ரூபாயாக உள்ளது. இதே குறைந்தபட்ச விலை 1671.50 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2262 ரூபாயாகவும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1518 ரூபாயாகவும் உள்ளது.

பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 2.51% குறைந்து, 1703 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இதுவரையில் இப்பங்கின் உச்சவிலை 1779.90 ரூபாயாக உள்ளது. இதே குறைந்தபட்ச விலை 1672.25 ரூபாயாக உள்ளது. இதன் 52 வார உச்ச விலை 2261.65 ரூபாயாகவும், இதே இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1514.05 ரூபாயாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bata india board recommends 1090% dividend: check here full details

Beta India has recommended a dividend of 1090% or Rs 54.50 per share for the financial year 2021-2022.
Story first published: Thursday, May 26, 2022, 11:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X