வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம் பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனம் தனது வர்த்தக வளர்ச்சிக்கு தேவையான நிதியை திரட்ட பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டை (ஐபிஓ) மேற்கொள்ள முடிவு செய்தது. இதனையடுத்து பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ.1,505 கோடி மதிப்பிலான ஐபிஓவை மேற்கொண்டது.
பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஐபிஓ கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஐபிஓவில் பங்கின் வெளியீட்டு விலை ரூ.85-90என நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி ஐபிஓ நிறைவடைந்தது. பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி வெளியீட்டு அளவை காட்டிலும் 41.3 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதனையடுத்து இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு வெற்றி அடைந்தது. பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸின் ஐபிஓ அதன் ரூ.1,505 கோடி பங்கு வெளியீட்டுக்கு ரூ.65,920 கோடி மதிப்புள்ள ஏலங்களை பெற்றது.

வரவேற்பு
முதலீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றதால், பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸின் கிரே மார்க்கெட் பிரீமியம் உறுதியாக உள்ளது. கடைசியா கிடைத்த தகவல்படி, கிரே மார்க்கெட்டில் இப்பங்கு ரூ.23 பிரீமியத்தை ஈட்டியதாக தகவல். அதாவது பங்கு வெளியீட்டு விலையை காட்டிலும் கூடுதல் விலை. இது பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் பட்டியலிடப்படும்போது முதலீட்டாளர்கள் 25-26 சதவீதம் ஆதாயம் பெறுவார்கள் என்பதை குறிக்கிறது.
தற்போது பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு ஒதுக்கீடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள், நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள், சில்லரை முதலீட்டாளர்கள் என அனைத்து பிரிவுகளிலும் அவற்றுக்கான ஒதுக்கீட்டு அளவை காட்டிலும் பல மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் குவிந்தன. இதனால் பங்கு வேண்டி விண்ணப்பித்த அனைவருக்கும் பங்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.
பங்குகள் ஒதுக்கீடு
பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸின் ஐபிஓவில் முதலீட்டாளர்களுக்கான தற்காலிக வாய்ப்புள்ள பங்குகள் ஒதுக்கீடு குறித்த தோரயமான மதிப்பீட்டின்படி, பெரிய எச்என்ஐ பிரிவில், 10 முதலீட்டாளர்களில் ஒரு முதலீட்டாளர் 2,324 பங்குளை பெறுவார் (10 சதவீதம் சாத்தியம்). சிறு எச்என்ஐ பிரிவில் 25 முதலீட்டாளர்களில் ஒருவர் 2,324 பங்குகளை பெறுவார் ( 4 சதவீதம் சாத்தியம்), சில்லரை முதலீட்டாளர்கள் பிரிவில் 4 முதலீட்டாளர்களில் ஒருவர் 166 பங்குகளை பெறுவார் (சாத்தியம் 25 சதவீதம்).
மே 26ம் தேதியன்று பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதற்கு அடுத்த நாள் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் டீமேட் கணக்கில் பங்குகள் வரவு வைக்கப்படும். மே 28ம் தேதியன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பெல்ரைஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலையோ ரூ.65க்கும் குறைவு.. ஐந்தே ஆண்டுகளில் 16,570% லாபம் கொடுத்த மெர்குரி இவி டெக்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications