மின்சார வாகனங்கள் துறையை சேர்ந்த நிறுவனம் மெர்குரி இவி டெக். இந்நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்சார வாகனங்களை வடிவமைத்து உற்பத்தி செய்கிறது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். மேலும் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது.
வருவாய்
2025 மார்ச் காலாண்டில் மெர்குரி இவி டெக் நிறுவனம் நிகர வருவாயாக ரூ.30.68 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 451 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.55 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆ்ண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 574 சதவீதம் அதிகமாகும்.

மெர்குரி இவி டெக் கடந்த 2024-25 முழு நிதியாண்டில் நிகர வருவாயாக ரூ.89.64 கோடி ஈட்டியுள்ளது. இது 2023-24ம் நிதியாண்டைக் காட்டிலும் 307 சதவீதம் வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.7.91 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 297 சதவீதம் அதிகமாகும்.
பங்கு விலை
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் மெர்குரி இவி டெக் நிறுவன பங்கின் விலை ரூ.63.85ல் முடிவுற்றது. கடந்த மார்ச் 4ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பபங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.51.24க்கு சென்றது. தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து 22 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 அக்டோபர் 3ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய வார உச்சமான ரூ.139.20ஐ எட்டியது.
நீண்ட கால அடிப்படையில் மெர்குரி இவி டெக் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 16,750 சதவீதம் வருமானத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 6,350 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 205 சதவீதம் பெருக்கியுள்ளது.
அன்னிய முதலீட்டாளர்கள்
கடந்த 2024-25ம் நிதியாண்டில் மெர்குரி இவி டெக் நிறுவனத்தின் 36.43 லட்சம் பங்குகளை அன்னிய நிதி முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர். கடந்த மாாச் காலாண்டு நிலவரப்படி, மெர்குரி இவி டெக் நிறுவனத்தின் புரோமோட்டர்கள் வசம் 59.18 சதவீத பங்குகள் உள்ளன.
பைனலா ரூ.2.70 லட்சம் கோடியை ஓகே செய்த ரிசர்வ் வங்கி.. மத்திய அரசுக்கு ஜாக்பாட் டிவிடெண்டு..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications