மத்திய அரசுக்கு வரிகள் வாயிலாக மட்டுமல்ல அரசு நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்டு வாயிலாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும். குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது உபரி பணத்தை மத்திய அரசுக்கு டிவிடெண்டாக வழங்கி வருகிறது. கடந்த சில நிதியாண்டுகளாக மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் தொகையை அதிகரித்து வருகிறது. இது நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.
பெரிய தொகை
உதாரணமாக கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கு ரிசர்வ் வங்கி ரூ.87.416 கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு வழங்கியது. 2023-24ம் நிதியாண்டுக்கு ரூ.2.1 லட்சம் கோடியை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரிசர்வ வங்கி வழங்கியது. இந்த சூழ்நிலையில், 2024-25ம் நிதியாண்டுக்கு டிவிடெண்டாக மத்திய அரசுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய தொகையை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் என தகவல் வெளியானது.

2024-25ம் நிதியாண்டுக்கு மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.2.5 முதல் 3 லட்சம் கோடி வரை ரிசர்வ் வங்கி வழங்க வாய்ப்புள்ளளது கூறப்பட்டது. ரிசர்வ் வங்கிக்கு டாலர் விற்பனையிலிருந்து கிடைக்கும் பெரிய லாபமே இதற்கு முக்கிய காரணம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, கடந்த நிதியாண்டுக்கு டிவிடெண்டாக ரூ.2.69 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு வழங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகமாகும்.
சஞ்சய் மல்ஹோத்ரா
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குனர்கள் குழவின் 616வது கூட்டத்தில டிவிடெண்டு வழங்குவது குறித் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 மே 15ல் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தப்பட்ட பொருளாதார மூலதன கட்டமைப்பின் (இசிஎஃப்) அடிப்படையில், மாற்றத்தக்க உபரி கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2024-25 கணக்கியல் ஆண்டிற்கு உபரியாக ரூ.2,68,590 கோடியை மத்திய அரசுக்கு மாற்றுவதற்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டாலர் உள்பட் அன்னிய செலாவணி இருப்புகளில் முதலீடுகள் மற்றும் மதிப்பீட்டு மாற்றங்களிலிருந்து கிடைக்கும் உபரி வருமானம் மற்றும் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் கிடைக்கும் கட்டணங்களிலிருந்து ரிசர்வ் வங்கி, அரசுக்கு ஆண்டுதோறும் ஒரு தொகையை வழங்குகிறது.
பட்ஜெட் எதிர்பார்ப்பு
மத்திய அரசு 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து டிவிடெண்டாக ரூ.2.6 லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பிட்டு இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி மட்டுமே அதனை காட்டிலும் கூடுலாக டிவிடெண்டு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications