பொதுவாக பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்போது, பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு பல யூடர்ன், ரைட், லெப்ட் என சுற்றி ஆய்வு செய்து முதலீட்டு குறித்த முடிவை எடுப்பது மிகவும் அவசியம். அப்படி ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும் முன்பு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் நிறுவனத்தின் மூலதனச் சந்தை மதிப்பு (Market Capitalization).
மூலதனச் சந்தை மதிப்பு என்பது, ஒரு நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பைக் குறிக்கிறது. பெரிய மூலதனச் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள், இந்தியப் பங்குச் சந்தையில் மிகவும் நிலையான மற்றும் லாபகரமான முதலீடு வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் பங்குகளின் விலை அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்,

மேலும் அதிக மூலதனச் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்கள் பொதுவாகவே நீண்ட காலமாக சந்தையில் இருக்கும் காரணத்தால் ஆய்வுகளை மேற்கொள்ள போதுமான தரவுகள் இருக்கும். இதனால் ஒரு நிறுவனம் சந்தை ஏற்ற இறக்கங்களைத் எப்படி தாக்குப்பிடிக்கிறது, நிலையான வருவாயையும் சொத்து மதிப்பில் ஏற்றத்தையும் வழங்குகிறதா என்பதையும் ஆய்வு செய்ய முடியும்.
அதிகப்படியான மூலதனச் சந்தை மதிப்பை கொண்டு இருக்கும் நிறுவனங்கள் பொரும்பாலான நேரத்தில் வலிமையான நிதி நிலையைக் கொண்டு இருக்கும். இதனால் கடன் வாங்கும் திறன் கொண்டவை மட்டும் அல்லாமல் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் திறனையும் கொண்டு இருக்கும்.
இதேபோல் நீண்ட காலமாக வர்த்தகத்தில் செயல்பட்டு, பங்குச்சந்தையில் பல வருட பயணத்தில் தான் அதிகப்படியான மூலதனச் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக இருக்க முடியும். இந்த உயரத்தை அடைய வேண்டுமெனில் , அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான நிர்வாக கட்டாயம் இருப்பதால் நிறுவனத்தின் செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகித்து, லாபத்தை அதிகரிக்கவும், பங்குதாரர்களின் மதிப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.
இதனால் அதிகப்படியான மூலதனச் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது லாப அளவுகள் சற்று குறைவாக இருந்தாலும் நிலையான லாபத்திற்கு உறுதி. இதேபோல் டிவிடென்ட், போனஸ் பங்குகள் மூலம் நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபத்தை பெற முடியும். சரி இந்திய சந்தையில் ஒவ்வொரு துறையிலும் அதிகப்படியான மூலதனச் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனத்தின் பட்டியலை உங்களுக்காக தயாரித்துள்ளோம்.
எரிசக்தி துறை - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
சில்லறை விற்பனை துறை - அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்
சிமெண்ட் துறை - அல்ட்ராடெக்
உணவகம் துறை - Jubilant Food
காலணிகள் துறை - மெட்ரோ பிராண்டுகள்
ஜவுளி துறை - கே.பி.ஆர். மில்
பெயிண்ட்ஸ் துறை - ஏசியன் பெயிண்ட்ஸ்
ஆல்கஹால் துறை - யுனைடெட் ஸ்பிரிட்ஸ்
கிரெடிட் கார்டு துறை - எஸ்பிஐ கார்டுகள்
குளிர்பான துறை - டாடா நுகர்வோர்
மருத்துவமனை துறை - அப்பல்லோ மருத்துவமனைகள்
ஹவுசிங் ஃபைனான்ஸ் துறை - HDFC
டெலிகாம் துறை - பார்தி ஏர்டெல்
NBFC துறை - பஜாஜ் ஃபைனான்ஸ்
நோயறிதல் துறை (Diagnostic) - டாக்டர். லால் பாத்லேப்ஸ்
ஐடி சேவைகள் துறை - டிசிஎஸ்
வங்கி துறை - HDFC வங்கி
FMCG துறை - ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
வேலைவாய்ப்பு தேடல் துறை - இன்ஃபோ எட்ஜ்
ஹோட்டல்கள் துறை - இந்திய ஹோட்டல்கள்
PSU துறை - எஸ்பிஐ
எலர்க்டிரிக் வாகனம் துறை - டாடா மோட்டார்ஸ்
தங்கக் கடன் துறை - முத்தூட்
Infra துறை - L&T
சர்க்கரை துறை - E.I.D- பாரி
Luggage துறை - வி.ஐ.பி. தொழில்கள்
பேப்பர் துறை - ஜேகே பேப்பர்
மியூச்சுவல் ஃபண்டுகள் துறை - HDFC AMC
தொழில்துறை இரசாயனம் துறை - குஜராத் ஃப்ளோரோகெம்
பிளாஸ்டிக் பொருட்கள் துறை - Supreme
அழகு துறை - FSN ஈகாமர்ஸ் (Nykaa)
திருமண உடைகள் துறை - வேதாந்த ஃபேஷன்கள்
எஃகு துறை - JSW ஸ்டீல்
மின் உற்பத்தியாளர் துறை - NTPC
பைப்புகள் துறை - Astral
புதுப்பிக்கத்தக்கது எரிசக்தி துறை - அதானி கிரீன்
தொழில்துறை தயாரிப்பு துறை - சீமென்ஸ்
Auto Ancillary துறை - Bosch
ரசாயனங்கள் துறை - SRF
இன்டர்நெட் வர்த்தக துறை - Zomato
பெண்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு துறை - அபோட்
4 சக்கர வாகனம் துறை - மாருதி சுஸுகி
பார்மா துறை - சன் பார்மா
ஆடம்பர பொருட்கள் துறை - டைட்டன்
ரியல் எஸ்டேட் துறை - DLF
விண்வெளி & பாதுகாப்பு துறை - HAL
மோட்டார் சைக்கிள் துறை - எய்ச்சர் மோட்டார்ஸ்
API & Life Sciences துறை - Divi's Labs
விமான நிறுவனங்கள் துறை - இண்டர்குளோப்
அக்ரோ கெமிக்கல்ஸ் துறை - யுபிஎல்
லாஜிஸ்டிக்ஸ் துறை - டெல்லிவரி


Click it and Unblock the Notifications