மும்பை: தற்போது செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகளும் செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்ட கருவிகளும் நாளுக்கு நாள் வெளிவருகின்றன. இதனால் தற்போது உலக அளவில் செமிகண்டக்டர்கள் எனப்படும் சிப்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது.
வியட்நாம் செமிகண்டக்டர் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை பிடிப்பதற்காக இந்தியா களமிறங்கியுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த செமிகண்டக்டர் நிறுவனங்களுடன் கைகோர்த்து இந்திய நிறுவனங்களும் இங்கே ஆலைகளை நிறுவி வருகின்றன.

முருகப்பா குரூப் குழுமத்தின் சிஜி (CG) பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த மூன்று ஆண்டுகளில் 620 சதவீதம் . சிஜி பவர் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் 7000 கோடி மதிப்பிலான செமிகண்டக்டர் ஆலையை நிறுவுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளது .
இந்த நிறுவனம் சிஜி செமி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இது தாய்லாந்தை சேர்ந்த ரெனேசா எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஸ்டார் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் பொது நிறுவனத்துடன் (Renesas Electronics Corporation and Stars Microelectronics (Thailand) Public Co. Ltd) கூட்டாக இணைந்து செமிகண்டக்டர் உற்பத்தியில் ஈடுபட உள்ளது.
மார்ச் மாதம் ஆலை கட்டுமான பணிகளை தொடங்கியதிலிருந்து தற்போது வரை சிஜி பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனிடையே சிஜி பவர் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 850 ரூபாய் வரை உயரும் என யுபிஎஸ் தரகு நிறுவனம் கணித்துள்ளது.
இந்த பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது. இந்த நிறுவனம் தங்களது முதலீடுகளை ஒதுக்கீடு செய்துள்ள வடிவம் மற்றும் நிறுவனத்தின் வருவாய், தற்போது செமிகண்டக்டர்களுக்கு உள்ள தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்த 12 முதல் 24 மாதங்களில் இதன் பங்கு மதிப்பு சிறந்த வளர்ச்சியை காணும் எனக் கூறியுள்ளது.
சிஜி பவர் நிறுவனத்தின் பங்கு மே 31 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தையில் 651 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த பங்கு மதிப்பு கடந்த ஒரு மாத காலத்தில் 17.43 சதவிகிதமும் கடந்த ஓராண்டு காலத்தில் 69 சதவிகிதமும் உயர்வு கண்டுள்ளது.
ஐந்தாண்டுகளின் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1690 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 98,849 கோடி ரூபாயாக உள்ளது. இதன் புக் வேல்யூ 19 .76, ஆகவும் ஃபேஸ் வேல்யூ 2ஆகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தின் வருவாய் 2023 ஆம் நிதி ஆண்டில் 7,040 கோடி ரூபாயாகவும் லாபம் 796 கோடி ரூபாய் என்று அளவிலும் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்குகளில் 58 சதவிகிதம் புரமோட்டர்கள், 16 சதவிகிதம் சில்லறை முதலீட்டாளர்கள், 15 சதவிகிதம் வெளிநாட்டு நிறுவனங்களிடம் உள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications