மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம் கடந்த சில காலாண்டுகள் நஷ்டத்தை சந்தித்தது. இருப்பினும் இந்நிறுவன பங்கு தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் அந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பெயர் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட். இந்நிறுவனத்தில் 9.62 சதவீத பங்கு மூலதனத்தை எல்ஐசி நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஎச்இஎல்) நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.23,364.94 கோடியும், நிகர லாபமாக ரூ.447.55 கோடியும் ஈட்டியிருந்தது. இருப்பினும் இந்த நிதியாண்டின் முதல் 2 நிதியாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2023 ஜூன் காலாண்டு மற்றும் செப்டம்பர் காலாண்டில் முறையே ரூ.351.67 கோடி மற்றும் ரூ.233.41 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த சில காலாண்டுகளாக இந்நிறுவனம் இழப்பை சந்தித்துள்ள போதிலும், இந்நிறுவனம் வலுவான வர்த்தக ஒப்பந்தங்களை கையில் வைத்துள்ளது. பிஎச்இஎல் நிறுவனம் ரூ.1,01,461 கோடி மதிப்பிலான ஆர்டர்களை கை வசம் வைத்துள்ளது.
மேலும், தற்போது ஒடிசாவில் 3x800 மெகாவாட் என்எல்சி தலபிரா அனல்மின் திட்டத்துக்கான பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான தொகுப்பு பணிக்கான ஒப்பந்த கடிதத்தை எல்எல்சி இந்தியா நிறுவனத்திடம் இருந்து பிஎச்இஎல் நிறுவனம் பெற்றுள்ளது.
ரூ.15,000 கோடி மதிப்பிலான இந்த மைல்கல் ஒப்பந்தமான பிஎச்இஎல் நிறுவனத்தின் வலுவான வர்த்தக செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது மற்றும் நாட்டின் மின்துறை வளர்ச்சியில் ஒரு முக்கிய நிறுவனமாக தன்னை அந்நிறுவனம் நிலை நிறுத்துகிறது.
இந்நிறுவனத்துக்கு தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தங்கள் குவிந்து வருவது இந்நிறுவனத்துக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. மேலும், முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவனம் மீது பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎச்இஎல் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார உயர்வான ரூ.205.60ஐ எட்டியது.
இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.69,710 கோடியாக உள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 140 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. இந்த பங்குகள் அபரிமிதமான வளர்ச்சியை காட்டியுள்ளன. எனவே முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கின் மீது எப்போதும் கவனம் வைக்க வேண்டும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications