இந்தியாவில் தொலை தொடர்பு சேவையில் நீண்ட காலமாக இருக்கும் ஒரு நிறுவனம் ஏர்டெல். என்ன தான் ஜியோ ஏர்டெல் நிறுவனத்தின் இடத்தை பிடித்து விட்டாலும் தரமான சேவையால் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏர்டெல் தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்தியாவில் பாரதி ஏர்டெல் என்ற பெயரில் செயல்படும் ஏர்டெல் தன் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி வைத்திருப்போருக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் டிவிடெண்ட் எனப்படும் ஈவு தொகை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி மார்ச் 31, 2026 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்காக, ஒரு பங்கிற்கு 24 ரூபாய் என்ற வீதம் டிவிடெண்ட் வழங்க நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

இதற்காக ரெக்கார்டு தேதியாக ஜூலை 24 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த தேதியில் யாரெல்லாம் ஏர்டெல் நிறுவன பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பங்குக்கு 24 ரூபாய் ஈவுத்தொகை கிடைக்கும். உதாரணமாக நீங்கள் 100 பங்கு வைத்திருந்தால் 2,400 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏர்டெல் பங்கின் விலை இன்றைய தேதிக்கு 1,920 ரூபாயாக உள்ளது.
செபியின் T+1 செட்டில்மென்ட் விதிகளின்படி, பங்குகள் உங்கள் டீமேட் கணக்கிற்கு வரவு வைக்கப்பட, பதிவு தேதிக்கு ஒரு நாள் முன்பே நீங்கள் பங்குகளை வாங்க வேண்டும். எனவே, ஜூலை 23 தான் நீங்கள் பங்குகளை வாங்குவதற்கான கடைசி நாள். உங்களிடம் ஏர்டெல் பங்கு இருந்தால் உங்கள் அக்கவுண்டிற்கே டிவிடெண்ட் வந்துவிடும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16 ரூபாய், அதற்கு முந்தைய ஆண்டு 8 ரூபாய் டிவிடெண்ட் வழங்கியது ஏர்டெல். ஜூலை 2009 முதல் இதுவரை 22 முறை டிவிடெண்ட் அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். தற்போதைய தரவுகளின்படி, நிறுவனத்தின் டிவிடெண்ட் ஈல்டு 0.84% ஆக உள்ளது. டிவிடெண்ட் குறித்த செய்தி வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் பார்தி ஏர்டெல் பங்குகள் 1,920 ரூபாய்க்கு வர்த்தகமானது. கடந்த ஒரு மாதத்தில் சுமார் 8% லாபத்த கொடுத்துள்ள இந்த பங்கு, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு 3 ஆண்டுகளில் 116% மற்றும் 5 ஆண்டுகளில் 261% லாபத்தை அளித்துள்ளது.
சர்வதேச தரகு நிறுவனமான நோமுரா, பார்தி ஏர்டெல் பங்குகளைத் தொடர்ந்து வாங்குங்கள் என்று பரிந்துரைத்துள்ளது. இதன் இலக்கு விலையை 2,355 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது தற்போதைய விலையிலிருந்து சுமார் 22% உயர்வு ஆகும். ஏர்டெல்லின் 5G சேவைகள் முழுமை பெற்றுள்ளதாலும், மூலதன செலவுகள் குறைந்துள்ளதாலும், வரும் காலங்களில் நிறுவனம் வலுவான பணப்புழக்கத்தை கொண்டு சிறந்த லாபம் பெறும் என நோமுரா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

