பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது ஒரு சயின்ஸ், ஒவ்வொரு விஷயமும் பல தொடர்புகள் கொண்டு இருக்கும். இதைச் சரியாக புரிந்துகொண்டு, குறித்த காலத்தில் சரியான நடவடிக்கை எடுத்தால் கட்டாயம் ஜாக்பாட் தான்.
இப்படி பங்குச்சந்தை முதலீட்டில் தினமும் ஜாக்பாட் அடித்தவர்கள் ஏராளம் அதேபோல் தினமும் பணத்தை இழப்பவர்களும் ஏராளம். எனவே, முடிந்தவரை நீண்ட காலத்திற்குப் பங்குகளை வைத்திருப்பது நல்லது.

நீண்ட கால முதலீட்டாளர்கள் பங்கு விலை உயர்வது மட்டுமல்ல, பட்டியலிடப்பட்ட நிறுவனம் அவ்வப்போது அறிவிக்கும் பல்வேறு சலுகைகளின் மூலமும் லாபம் ஈட்டுகிறார்கள். இப்படி என்ன சலுகை என்றுதானே கேட்குறீங்க.
போனஸ் பங்குகள் (bonus shares), பங்கு திரும்ப வாங்குதல் (buyback), பங்குப் பிரிப்பு (stock split), இடைக்கால ஈவுத்தொகை (interim dividend), சிறப்பு ஈவுத்தொகை (special dividend), இறுதி ஈவுத்தொகை (final dividend) போன்ற வடிவங்களில் பங்கு முதலீட்டாளர்கள் கூடுதல் லாபம் பெறுவார்கள்.
ஆரம்பத்தில் இந்த சலுகைகள் பெரிய லாபகரமாகத் தெரியாவிட்டாலும் , நீண்ட காலத்தில், இவை உங்கள் பணத்தைப் பல மடங்கு அதிகரிக்க உதவும். இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் உங்களுக்கு கட்டாயம் புரியும்.
உதாரணமாகப் பத்தியா கம்யூனிகேஷன்ஸ் & ரீடைல் (இந்தியா) என்னும் நிறுவனத்தின் பங்கு மதிப்பின் வரலாறு, ஒரு நல்ல புரிதலை உங்களுக்கு அளிக்கும். பத்தியா கம்யூனிகேஷன்ஸ் பங்கு 2018 பிப்ரவரியில் பங்கு ஒன்றுக்கு 150 ரூபாய் என்ற விலையில் BSE SME ஐபிஓ-வில் அறிமுகமாகி 153.95 ரூபாய் என்ற விலையில் பட்டியலிடப்பட்டது.
இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட்ட பிறகு, பத்தியா கம்யூனிகேஷன் நிறுவனம் நிறுவனத்தின் கூடுதல் சலுகைகளை வழங்கியது. இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு 2018 இல் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளையும், 2022 இல் 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு அதாவது Stock Split-ஐ அறிவித்தது.
எனவே, பத்தியா கம்யூனிகேஷன்ஸ் ஐபிஓ-வில் ஒருவர் முதலீடு செய்து பங்குகளை பெற்று இருந்தால் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளும், 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பும் தேர்ந்து பங்குதாரரிடம் பங்கு எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்து இருக்கும்.
பத்தியா கம்யூனிகேஷன் ஐ.பி.ஓ விவரங்களின்படி, ஒரு லாட்-ல் 1000 பங்குகளைக் கொண்டிருந்தது. எனவே, ஐபிஓ முதலீட்டாளருக்கு முதல் 1000 பங்குகள் கிடைத்திருக்கும். அதன் பின்பு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் மூலம் 2000 பங்குகள் கிடைத்திருக்கும். இதைத் தொடர்ந்து 1:10 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு மூலம் 2000 பங்குகள் 20000 பங்குகளாக மாறியிருக்கும்.
இதை தொடர்ந்து 2018 ஐபிஓ-வில் 1.50 லட்சம் ரூபாய் (1000 பங்குகள் x ₹150) முதலீடு செய்திருந்தால், அது இன்று 7.41 லட்சம் ரூபாயாக (20,000 பங்குகள் x ₹37.05) அதிகரித்து இருக்கும். பத்தியா கம்யூனிகேஷன்ஸ் பங்கின் தற்போதைய விலை 37.05 ரூபாய்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications