அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார் அதிகபட்சமாக சீனாவுக்கு 34 சதவீதம் வரி விதித்துள்ளது.
அதேசமயம், இந்திய பொருட்களுக்கு 26 சதவீதமும், ஜப்பானிய பொருட்களுக்கு 24 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 சதவீதமும் அமெரிக்கா வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு வரும் 9ம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஆசிய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய், சீனாவின் யுவான் மதிப்பு வீழ்ச்சி கண்டது. பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடுமையாக சரிந்தது.
சிங்கப்பூரில் இன்று காலையில் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்தான பிட்காயின் 4 சதவீதம் சரிந்து சுமார் 82,000 டாலராக குறைந்தது. இருப்பினும் பின்னர் பிட்காயின் இழப்புகளை ஈடு செய்தது. அதேசமயம், ஈதர் மற்றும் எக்ஸ்ஆர்பி உள்ளிட்ட பிற கிரிப்டோ கரன்சிகளும் சரிந்தன. சோலானா ஒரு கட்டத்தில் அதன் மதிப்பில் 9 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது.
அவா லேப்ஸின் தலைவர் ஜான் வூ கூறுகையில், நிலையான உயர்ந்த வட்டி விகிதங்கள் அல்லது வர்த்தக வரிகள் அறிமுகப்படுத்துதல் போன்ற அறிவிப்புகளை தொடர்ந்து வரும் நிச்சயமற்ற காலங்களில் கிரிப்போகரன்சிகள் பொதுவாக மோசமாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
பிடிசி மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் கிரிப்டோ ஆய்வாளர் ரேச்சல் லூகாஸ் கூறுகையில், அடுத்த பெரிய நகர்வு புவிசார் அரசியல், கொள்கை மாற்றங்கள் மற்றும் வர்த்தகர்கள் பிட்காயினை ஆபத்தாகவோ அல்லது அடைக்கலமாகவோ பார்க்கிறார்களா என்பதை பொறுத்து இருக்கும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்களில் தங்கமும் ஒன்றாகும். சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவன்ஸ் தங்கத்தின் விலை சுமார் 3,160 என்ற அளவில் இருந்தது. தற்போது தங்கத்தின் விலை அதன் உச்ச விலைக்கு அருகில் உள்ள.
இதன் மூலம் நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டு செய்ய சிறந்த புகலிடமாக தங்கம் விளங்குகிறது என்பதை இது காட்டுகிறது. டிஜிட்டல் சொத்து ஆர்வலர்கள் பெரும்பாலும் பிட்காயினை முதலீட்டாளர்களுக்கு இதே போன்ற அடைக்கலமாக அமைத்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஏற்ற இறக்கம் நிலவிய காலங்களில் அசல் கிரிப்டோகரன்சி பாதிக்கக்கூடியதாக தெரிந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications