சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி.. இரண்டாவது நாளாக தொடரும் சரிவு.. என்ன காரணம்..!

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்று இந்திய சந்தைகள் பலத்த சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் 400.34 புள்ளிகள் குறைந்து, 51,703.83 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 104.55 புள்ளிகள் குறைந்து, 15,208.90 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இதற்கிடையில் 1480 பங்குகள் ஏற்றத்திலும், 1422 பங்குகள் சரிவிலும், 144 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிந்து 72.75 ரூபாயில் முடிவடைந்துள்ளது.

சென்செக்ஸ் 400 புள்ளிகள் வீழ்ச்சி.. இரண்டாவது நாளாக தொடரும் சரிவு.. என்ன காரணம்..!

இதற்கிடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவில் முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, பவர்கிரிட் கார்ப், எண்டிபிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் எஸ்பிஐ, பவர்கிரிட் கார்ப், என்டிபிசி, ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், பஜாஜ் பின்செர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்தஸிந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

பலவீனமான சர்வதேச காரணிகள், அதிகரித்து வரும் பத்திர லாபம், பணவீக்கம் உள்ளிட்ட பல காரணிகளினால் சந்தையானது சரிவில் உள்ளது. அதோடு மீடியம் டெர்ம் முதலீட்டாளர்களும் கிடைத்த லாபத்தினை புக் செய்து வருகின்றனர். இதனால் சந்தை சரிவில் முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+