பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் ஒன்றான பிஎல்பி ((BLB) லிமிடெட் நிறுவனம் பங்குகள் மற்றும் பத்திரங்களில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தையின் கார்ப்பரேட் உறுப்பினர்.
ரூ.30க்கு கீழ் உள்ள இந்த ஸ்மால் கேப் பங்கின் நிதி நிலை முடிவுகள் முடிவுகள் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6.05 கோடி ஈட்டியுள்ளது. மேலும் 2023 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.23 கோடியும், டிசம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1.48 கோடியும் ஈட்டியுள்ளது.

நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பிஎல்பி நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. உதாரணமாக கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு 300 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கடந்த 10 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 785 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்த ஸ்மால்கேப் பங்கு கடந்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஆதாயம் அளிக்கவில்லை.
2023 ஜனவரி 19ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் பிஎல்பி நிறுவன பங்கு புதிய 52 வார உச்ச விலையான ரூ.32.65ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கு தற்போது வரை ஏற்றம் காணவில்லை. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎல்பி நிறுவன பங்கின் விலை ரூ.24.73க்கு வர்த்தகமானது.
ட்ரீம் அச்சிவர் கன்சல்டன்சி சர்வீசஸ், பங்குதாரர்களிடமிருந்து தலா ரூ.1 முகமதிப்பு கொண்ட 1,37,44,967 ஈக்விட்டி பங்குகளை வாங்குவதற்கான ஓபன் ஆஃபர் அறிவித்துள்ளது என்று பிஎல்பி நிறுவனம் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்நிறுவன பங்கின் விலை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎல்பி நிறுவன பங்கின் விலை 7 சதவீதம் அதிகரித்தது. தற்போதைய ஓபன் ஆஃபரில் ஒரு ஈக்விட்டி பங்கின் விலை ரூ.22.60ஆக இருக்கும். இந்த ஓபன் ஆஃபரில் முழு பங்குகளும் கையகப்படுத்தினால், பங்குகளை வாங்கியவர் செலுத்த வேண்டிய தொகை ரூ.31.06 கோடியாக இருக்கும்.
ட்ரீம் அச்சிவர் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 1.94 கோடி ஈக்விட்டி பங்குகளை ரூ.22.50 விலையில் வாங்குவதற்கு பிஎல்பி நிறுவனத்தின் தற்போதை புரோமோட்டர்களுடன் ஜனவரி 17ம் தேதியிட்ட பங்கு கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications