புதிய கொரோனா தொற்று! ரத்தக்களறியான மும்பை பங்குச்சந்தை, முதலீட்டாளர்கள் ரூ.7 லட்சம் கோடி இழப்பு!

பிரிட்டன் நாட்டின் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டில் புதிதாகக் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பிரிட்டன் விமானங்கள், பிரிட்டன் விமானப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்துள்ளது. இதனால் உலக நாடுகளில் 2வது முறை கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Recommended Video

படு வீழ்ச்சி அடைந்த பங்குச்சந்தை.. 7 லட்சம் கோடி நஷ்டம்.. கதறும் முதலீட்டாளர்கள்..!

இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஜப்பான் சந்தைகள் கணிசமான சரிவை எதிர்கொண்ட நிலையில் இந்திய சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 2000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

2000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ் குறியீடு வர்த்தக முடிவில் 1,406.73 புள்ளிகள் சரிந்து 45,553 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 3 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.

இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 432.15 புள்ளிகள் சரிந்து 13,328.40 புள்ளிகளை அடைந்து 3.14 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.

 

மாதக்கணக்கில் வீழ்ச்சி

மாதக்கணக்கில் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தில் NALCO 8 மாத வீழ்ச்சி, ZEE 6 மாத வீழ்ச்சி, பெட்ரோநெட் எல்என்ஜி 9 மாத வீழ்ச்சி, NBCC 8 மாத வீழ்ச்சி, firstsource 6 மாத வீழ்ச்சி, டாடா மோட்டார்ஸ் 7 மாத வீழ்ச்சி, ஆர்பிஎல் பேங்க் 7 மாத வீழ்ச்சி, ஐடிசி 7 மாத வீழ்ச்சி, BEL 3 மாத வீழ்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி 9.15 சதவீத வீழ்ச்சி, இன்டஸ்இந்த் வங்கி 6.98 சதவீத வீழ்ச்சி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 6.26 சதவீத வீழ்ச்சி அடைந்தது.

அதேபோல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி பங்குகளும், உலோக துறை பங்குகளும் அதிகளவிலான வீழ்ச்சியை அடைந்ததுள்ளது.

 

பிரிட்டன் கொரோனா தொற்று

பிரிட்டன் கொரோனா தொற்று

பிரிட்டன் நாட்டில் புதிதாகப் பரவி வரும் கொரோனா தொற்றில் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் தொற்றைப் பரப்பும் அளவில் இருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் உலக நாடுகளுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் புதிய வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

 

ஐரோப்பிய சந்தை

ஐரோப்பிய சந்தை

பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக இன்று இங்கிலாந்து பங்குச்சந்தை 2.62 சதவீதம், பிரான்ஸ் 3.37 சதவீதம், ஜெர்மனி 3.56 சதவீதம், ஸ்விஸ் 1.90 சதவீதம் என மொத்த ஐரோப்பிய சந்தையும் 2.90 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

ஐரோப்பிய சந்தையின் இன்று ஏற்பட்டுள்ள வீழ்ச்சி அமெரிக்கச் சந்தையில் பெரிய அளவிலான வீழ்ச்சியை எதிர்கொள்ளும்.

 

இந்திய ரூபாய் மதிப்பு

இந்திய ரூபாய் மதிப்பு

பிரிட்டன் நாட்டின் கொரோனா தொற்றுக் காரணமாக அன்னிய முதலீடுகளின் அளவு பெருமளவில் குறைந்துள்ள நிலையில், அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டு முதலீடுகள் வெளியேறிய நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 வாரச் சரிவைச் சந்தித்துள்ளது.

நாணய சந்தை

நாணய சந்தை

நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.79 ரூபாயாகச் சரிந்து 2 வார சரிவைப் பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகச் சந்தை முடிவில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.57 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் சந்தை சரிவு

கச்சா எண்ணெய் சந்தை சரிவு

இதேபோல் உலக நாடுகள் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கச்சா எண்ணெய் தேவை குறையும். இதன் வாயிலாகக் கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை சுமார் 2 டாலர் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் 2.06 டாலர் சரிந்து 50.20 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 1.95 டாலர் சரிந்து 47.15 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+