சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மிகவும் மோசமான சரிவை பதிவு செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் இரண்டு குறியீடுகளுமே 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளை டார்கெட் செய்து வர்த்தகத் தடைகள் மற்றும் வரிகளை விதிப்பதாக கூறியதும், இந்திய கார்ப்ரேட் நிறுவனங்களின் மந்தமான மூன்றாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடுவதும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வது போன்ற காரணத்தால் இந்திய பங்குச்சந்தை இன்று ரத்தகளறியானது. ஆனால் இதை தாண்டி மிக முக்கியமான காரணம் உள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 1,431.57 புள்ளிகள் குறைந்து 1.89 சதவீதம் சரிந்து 75,641.87 ஆக முடிவடைந்தது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி அதிகப்படியாக 367.9 புள்ளிகள் குறைந்து தனது 23000 புள்ளிகள் அளவீட்டை இழந்து தற்போது 22,976.85 புள்ளிகளில் முடிந்தது. நிஃப்டி ஜூன் 7, 2024 க்குப் பிறகு 23,000 புள்ளிகளுக்குக் கீழே இறங்குவது இதுவே முதல் முறை.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1235.08 புள்ளிகள் சரிந்து 75,838.36 ரூபாயாக உள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 320.10 புள்ளிகள் சரிந்து 23,024 புள்ளிகளை தொட்டு உள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு இன்று 8 லட்சம் கோடி ரூபாய் வரையில் சரிந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு பல முக்கிய காரணிகள் பங்களித்தாலும் மிக முக்கியமான காரணம் பிரிக்ஸ் நாடுகள் மீது வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டியது தான். டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்ற தனது திட்டத்தை டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
இத்தகைய "டி-டாலரைசேஷன்" முயற்சிகளை மேற்கொள்ளும் எந்தவொரு பிரிக்ஸ் நாடாக இருந்தாலும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டும் வேளையில், பிரிக்ஸ் பொருளாதாரக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராக இந்தியா உள்ளது.
ரஷ்யா, சீனா, இந்தியா இணைந்து கடந்த சில வருடங்களாக டாலரை நம்பியிருக்க கூடாது என்பதற்காக பல வேலைகளை செய்து வந்த நிலையில் தற்போது இதற்கு முட்டுக்கட்டை போடுவது மட்டும் அல்லாமல் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிரட்டவும் செய்கிறது.
டாலர் பயன்பாட்டை குறைத்தால் தான் நம்நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதில் உறுதியாக இருக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப்-ன் அறிவிப்பு கட்டாயம் பெரும் பாதிப்பை கொடுக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனாலேயே பங்குச்சந்தையில் அதிகப்படியான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications