சந்தூர் மாங்கனீஸ் அண்டு அயர்ன் ஓரெஸ் லிமிடெட் முன்னணி இரும்பு தாது நிறுவனமாகும். இந்நிறுவனம் கர்நாடகாவின் ஹோஸ்பெட்-பல்லாரி பகுதியில் குறைந்த பாஸ்பரஸ் மாங்கனீசு மற்றும் இரும்பு தாது சுரங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இ்நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.270.91 கோடி ஈட்டியிருந்தது. கடந்த 2023 ஜூன் காலாண்டில் ரூ.39.80 கோடியும், செப்டம்பர் காலாண்டில் ரூ.26.35 கோடியும் நிகர லாபமாக இந்நிறுவனம் ஈட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் 3 ஆண்டுகள் ஈக்விட்டி மீதான வருவாய் (ROE) 27 சதவீதமாக உள்ளது.

Sandur Manganese & Iron Ores நிறுவனம் தொடர்ந்து லாபத்தில் இயங்குவது மற்றும் வலுவான செயல்பாடுகள் காரணமாக சந்தூர் மாங்கனீஸ் அண்டு அயர்ன் ஓரெஸ் லிமிடெட் நிறுவனத்தில் அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பங்குமூலதனத்தை அதிகரித்துள்ளனர்.
2023 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்கு மூலதனத்தை 0.10 சதவீதம் உயர்த்தி 0.43 சதவீதமாக அதிகரித்தனர். அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 0.62 சதவீதம் அதிகரித்து 1.26 சதவீதமாக பங்கு மூலதனத்தை அதிகரித்தனர்.
சந்தூர் மாங்கனீஸ் அண்டு அயர்ன் ஓரெஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு அண்மையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 5:1 என்ற விகிதத்தில் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்க உள்ளதாக அறிவித்தது.
இது தான் இந்நிறுவன வரலாற்றில் முதல் போனஸ் அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் எதிரொலியாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சந்தூர் மாங்கனீஸ் அண்டு அயர்ன் ஓரெஸ் லிமிடெட் பங்கு விலை புதிய 52 வார உச்சமான ரூ.3,258ஐ எட்டியது. இருப்பினும் பின்னர் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் செயல்பட்டதால் பங்கு விலை ரூ.3,088.55ல் முடிவுற்றது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்கின் விலை 0.32 சதவீதம் உயர்ந்து ரூ.3,098.50ல் நிறைவடைந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.8,367.75 கோடியாக உள்ளது. கடந்த ஓராண்டில் இந்த ஸ்மால்கேப் நிறுவன பங்கு விலை 244 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்த பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 770 சதவீதம் அதிகரித்து தன்னை ஒரு மல்டிபேக்கர் பங்காக நிலைநிறுத்தியுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications