நாட்டின் முன்னணி பங்குச் சந்தை அமைப்பான பிஎஸ்இ, குறிப்பிட்ட 7 நிறுவன பங்குகளில் வர்த்தகம் செய்வது குறித்து முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. பிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், என்பீ டிரேட் ஃபைனான்ஸ்,திருப்பதி டயர்ஸ், பிரதின், ஒன்சோர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் வென்ச்சர்ஸ், ரெமிடியம் லைஃப்கேர், முரே ஆர்கனைசர் மற்றும் ஷரணம் இன்ஃப்ராபுராஜெக்ட் அண்ட் டிரேடிங் நிறுவனம் ஆகிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்கள்
யூடியூப், டெலிகிராம் சேனல்கள், வாட்ஸ்அப் சேனல்கள், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக பத்திர சந்தைகளில் வர்த்தக செய்வதில் அதிக மற்றும் உறுதி செய்யப்பட்ட வருமானம் கிடைக்கும் என்ற கூற்றுகளால் முதலீட்டாளர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்இ குறிப்பிட்ட 7 பங்குகளில், 6 பங்குகளின் விலையோ ரூ.2க்கு குறைவானது. திருப்பதி டயர்ஸ் நிறுவன பங்கின் விலை மட்டுமே ரூ.10க்கும் அதிகமாகும். மேலும் திருப்பதி டயர்ஸ் நிறுவனத்தை தவிர, ரெமீடியம் லைஃப்கேர் என்ற நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாகும்.
என்பீ டிரேட் ஃபைனான்ஸ்
என்பீ டிரேட் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 7 பென்னி பங்குகளின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டு இந்த பங்குகளில் வர்த்தகம் செய்வதில் எச்சரிக்கையாக இருக்கும்படி பிஎஸ்இ எச்சரிக்கை செய்துள்ளபோதிலும், அந்த 7 பங்குகளில் 3 பங்குகளின் விலை அப்பர் சர்க்கியூட் அடித்து இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே என்பீ டிரேட் ஃபைனான்ஸ் பங்கின் விலை 5 சதவீதம் லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.0.68ஆக வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஷரணம் இன்ஃப்ராபுராஜெக்ட் அண்ட் டிரேடிங் பங்கின் விலை 5 சதவீதம் லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.0.45ஆக சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே திருப்பதி டயர்ஸ் பங்கின் விலை 2 சதவீதம் லோயர் சர்க்கியூட் அடித்து ரூ.10.39ஆக வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிரதின் பங்கின் விலை 2.70 சதவீதம் குறைந்து ரூ.0.36ஆக இருந்தது.
ஒன்சோர்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஒன்சோர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் வென்ச்சர்ஸ் பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.1.55ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ரெமீடியம் லைஃப்கேர் பங்கின் விலை 2 சதவீதம் அப்பர் சர்க்கியூட் அடித்து ரூ.1.76 வரை சென்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே முரே ஆர்கனைசர் பங்கின் விலை 5 சதவீதம் அப்பர் சர்க்கியூட் ரூ.1.55ஆக இருந்தது.
அமெரிக்கா-சீனா ஒப்பந்தம்.. கட்சி மாறும் அன்னிய முதலீட்டாளர்கள்.. இந்திய சந்தைகளுக்கு பாதிப்பா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications