கடந்த ஏப்ரலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அறிவித்தது முதல், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இரு நாடுகளும் ஈகோவில் போட்டி போட்டு பரஸ்பரம் இறக்குமதி வரியை அதிகரித்தன. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல என்ற மனநிலைக்கு வந்தனர்.
200 கோடி டாலர்
இதனையடுத்து, சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டை குவிக்க தொடங்கினர். கடந்த ஏப்ரல் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் சுமார் 200 கோடி டாலரை இந்திய பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குகளில் முதலீடு செய்வார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு வேட்டு வைப்பது போல் ஒரு எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

போட்டி போட்டு வரியை உயர்த்துவதால் எந்தவித பயனும் இல்லை நஷ்டம் நமக்குதான் என்பதை உணர்ந்த அமெரிக்காவும், சீனாவும், வரிகள் தொடர்பான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ள முடிவு செய்தன. இதனையடுத்து அண்மையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பர வரியை குறைத்து கொள்ள ஒப்புக்கொண்டன.
வர்த்தக உறவு
தற்போது அமெரிக்கா-சீனா உறவு சுமூகமாகி விட்டதால், சர்வதேச முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து முதலீட்டை திரும்ப பெற்று, மீண்டும் கவர்ச்சிகரமான சீன பங்குச் சந்தைகளுக்கு செல்லக் கூடும் என்ற சிஎல்எஸ்ஏ ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அதேசமயம், சர்வதேச முதலீட்டாளர்கள் எல்லோரும் சீன பங்குச் சந்தையில் முதலீடு செய்வதை விரும்புவதில்லை என்று சில நிபுணர்கள் எதிர்கருத்தை பதிவு செய்துள்ளனர்.
ஆம்னிசயின்ஸ் கேபிட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியும் ஸ்மால்கேஸ் மேலாளருமான டாக்டர் விகாஸ் குப்தா கூறுகையில், சீன பங்குச் சந்தைகள் எந்த நீண்ட கால வருமானத்தையும் வழங்கவில்லை. உதாரணமாக, மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இருந்தபோதிலும், சீன பங்குச் சந்தையின் செயல்திறனை காட்டும் MSCI China ETF (MCHI) இன்டெக்ஸ் 2011 முதல் இன்று வரை பெரிய வளர்ச்சி காணவில்லை. இது பெருநிறுவன மதிப்பு உருவாக்கத்தில் ஆழமான சிக்கல்களை காட்டுகிறது.
அதிக கடன் விகிதம்
ஒரு மேல்நோக்கிய சரிவிலிருந்து சில குறுகிய கால ஆதாயங்கள் இருக்கலாம். ஆனால் சீனாவிற்கு நீண்ட கால ஒதுக்கீடுகள் சாத்தியமில்லை. இதுதவிர, சீனாவின் அதிக கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், சுருங்கி வரும் வேலை செய்யும் வயது மக்கள் தொகை, வங்கிகளின் பலவீனமான இருப்பு நிலைகள் போன்றவற்றால் அன்னிய முதலீட்டாளர்கள் சீன பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தயங்குவார்கள்.
500 கோடி போட்டு 10,000 கோடி எடுத்த முகேஷ் அம்பானி.. ஏசியன் பெயிண்ட்ஸ் மூலம் ஜாக்பாட்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications