இந்தியாவின் மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தான் ஒரு சிறந்த தொழிலதிபர் மட்டுமல்ல சிறந்த முதலீட்டாளரும் கூட என்பதை தற்போது நிரூபித்துள்ளார். 2008ல் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் அவர் மேற்கொண்ட ரூ.500 கோடி முதலீடு இன்று அவருக்கு ரூ.10,000 கோடி லாபத்தை கொடுக்க உள்ளது. ரூ.500 கோடி முதலீடு இன்று அவருக்கு 2,000 சதவீதம் லாபத்தை அளிக்க உள்ளது.
சர்வதேச நிதி நெருக்கடி
சர்வதேச நிதி நெருக்கடி ஏற்படுவதற்கு முன், 2008 ஜனவரியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது முதலீட்டு நிறுவனமான ஓஜஸ்வி டிரேடிங் வாயிலாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் 4.9 சதவீத பஙகுகளை ரூ.500 கோடிக்கு வாங்கியது. கடந்த 17 ஆண்டுகளாக அதனை விற்காமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்து இருந்தது. இந்த காலத்தில் ஏசியின் பெயிண்ட்ஸ் நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி கண்டது. அதன் பங்கு விலையும் விறுவிறுவென ஏற்றம் கண்டது.

இன்று இந்தியாவின் 900 கோடி டாலர் மதிப்பிலான பெயிண்ட்ஸ் சந்தையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் நம்பர் 1 இடத்தில் உள்ளது. பெயிண்ட் சந்தையில் புதிதாக களம் இறங்கிய பல நிறுவனங்கள் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் நம்பர் 1 இடத்தை பிடிக்க கடுமையாக முயற்சி வருகின்றன. புதிய நிறுவனங்களின் வரவு ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தகத்தை சிறிது பாதித்துள்ளது.
நம்பர் 1
கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஏசியன் பெயிண்ட்ஸ் சந்தை பங்களிப்பு 59 சதவீதத்திலிருந்து 52 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும் ஏசியன் பெயிண்ட்ஸ் இன்னும் நம்பர் 1 இடத்தில் கெட்டியாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 25 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த காலத்தில் புளூ சிப் பங்குகளில் மிகவும் மோசமான செயல்பட்டது இந்த பங்குதான். ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலை தற்போது ரூ.2,300 என்ற அளவில் உள்ளது. மேலும், தரகு நிறுவனமான நுவமா, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.2,200ஆக குறைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், தற்போது 17 ஆண்டுகால முதலீட்டை பணமாக்கும் நோக்கில் ஏசியின் பெயிண்ட்ஸின் 4.9 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு முகேஷ் அம்பானி ஏற்கனவே ஒரு முறை ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை விற்பனைசெய்ய முயற்சி மேற்கொண்டார். ஆனால் அப்போது அது முடியாமல் போனது.
தள்ளுபடி
சிங்கிள் அல்லது பிளாக் டீல் மூலம் பங்கு பரிவர்த்தனையை நிர்வகிக்க பேங்க் ஆஃப் அமெரிக்காவை ரிலையன்ஸ் நியமித்துள்ளது. தற்போதைய சந்தை விலையை காட்டிலும் 6 முதல் 7 சதவீதம் தள்ளுபடி விலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகளை அம்பானி நிறுவனம் விற்பனை செய்ய உள்ளதாக தகவல். கடந்த 24 மணி நேரத்தில் வாங்குபவர்களுக்கான போட்டியில் பல முதலீட்டு வங்கிகள் மற்றும் தரகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கின் விலை ரூ.2,325.10ல் முடிவுற்றது. இந்த விலையில் 4.9 சதவீத பங்குகளை விற்றால் கூட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு ரூ.11,141 கோடி கிடைக்கும்.
தீவிரமடையும் ஐபிஓ அழுத்தம்... பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய 4 முக்கிய நிர்வாகிகள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications