இந்தியப் பங்குச்சந்தை இன்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்தைத் தொட்ட அதே நாளில், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.400 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 370.09 புள்ளிகள் உயர்ந்து 74,613.28 புள்ளிகளைத் தொட்டு உள்ளது. இன்று சென்செக்ஸ் 74673.84 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது போல் நிஃப்டியும் 22,634.30 என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது.

2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி, மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பீடு ரூ.300 லட்சம் கோடியை எட்டிய நிலையில் வெறும் 9 மாதத்தில் 100 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில், பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்ட துறைகளில் ஒன்றாக பொதுத் துறை நிறுவனப் பங்குகள் (PSU Stocks) உள்ளது. பொதுவாக பொதுத்துறை நிறுவனத்தின் மீதான முதலீட்டு லாபம் என்பது குறைவாக இருந்தாலும், நிலையானதாக இருக்கும். ஆனால் கடந்த ஒரு வருடத்தில் நிலைமையே வேறு.
'மோடி கியாரண்டி' என்ற சொல் இந்தியப் பங்குச்சந்தையில் கடந்த ஒரு வருடத்தில் டிரெண்டானது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் அதிகப்படியான மூலதனச் செலவினம் (capex) மற்றும் முக்கிய வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவை பல துறையில் இருக்கும் அரசு நிறுவனங்கள் மீது முதலீட்டை ஈர்த்தது.
இதன் வாயிலாக ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வரையில் அரசு நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி முதலீட்டைச் செய்தனர்.
இதன் விளைவாக, கடந்த 12 மாதங்களில் நிஃப்டி பிஎஸ்இ (Nifty PSE) மற்றும் நிஃப்டி சிபிஎஸ்இ (Nifty CPSE) குறியீடுகள் இரட்டிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல், நிஃப்டி பொதுத் துறை வங்கி (Nifty PSU Bank) குறியீடும் சுமார் 95% உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மொத்த பங்குச்சந்தையில் வியப்பு அளிக்கும் விஷயம் என்னவென்றால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனப் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. நிஃப்டி மைக்ரோகேப் 250 (Nifty Microcap 250) குறியீடு கிட்டத்தட்ட 93% உயர்ந்துள்ளது. நிஃப்டி ஸ்மால்கேப் 100 (Nifty Smallcap100) குறியீடு 80% உயர்வு கண்டுள்ளது. நிஃப்டி மிட்கேப் 100 (Nifty Midcap100) குறியீடு 66% அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பங்குச்சந்தையின் எதிர்கால போக்கு பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படலாம். இதில் முக்கியமான விஷயங்களாகப் பார்க்கப்படுவது மத்திய வங்கிகளின் வட்டி விலை நிர்ணயம், மக்களவைத் தேர்தல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நிறுவனங்களின் லாப அறிக்கை காலம் ஆகியவை பங்கு விலைகளைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளது.
கடந்த ஆண்டின் சிறப்பான செயல்பாட்டைத் தொடர்ந்து, பொதுத் துறை நிறுவனப் பங்குகள் எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படுமா என்பது இதனைப் பொறுத்தே இருக்கும். முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர் ஆலோசனை பெறுவதைத் தாண்டி சொந்தமாக ஆய்வு செய்து முடிவுகள் எடுப்பது சிறந்தது.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications