இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று மந்தமான வர்த்தகத்துடன் துவங்கினாலும் மகத்தான சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு (Market Capitalization) முதன்முறையாக 5 டிரில்லியன் டாலரைக் கடந்துள்ளது.
இதன் மூலம், இந்திய பங்குச்சந்தையின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. தேர்தல் காலம் என்பதால் மும்பை பங்குச்சந்தை அதிகப்படியான வர்த்தக தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும் இந்த சாதனை பாராட்டுக்குரியது. சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிவுடன் இன்று முடிவடைந்துள்ளது.

புதிய உச்சம்: மே 21 வர்த்தகத்தில், பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் மொத்த மதிப்பு 5 டிரில்லியன் டாலர் அதாவது 414.46 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 633 பில்லியன் டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்னும் அதன் உச்சபட்ச அளவீட்டை எட்டவில்லை என்றாலும், பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் (Midcap & Smallcap Indices) புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
வளர்ச்சி பயணம்: பிஎஸ்இ-யின் மொத்த சந்தை மதிப்பு 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் $4 ட்ரில்லியனை எட்டியது. இந்நிலையில், வெறும் ஆறு மாதங்களில் அது $5 ட்ரில்லியனை கடந்துள்ளது.
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் $1 ட்ரில்லியனை எட்டியது. இதைத் தொடர்ந்து வெறும் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகி 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் $2 ட்ரில்லியனையும், 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் $3 ட்ரில்லியனையும் எட்டியது.
உலகளவில் இந்தியா ஆதிக்கம்: தற்போது உலகளவில் $5 ட்ரிலியனுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பங்குச்சந்தைகளைக் கொண்டவையாக நான்கு நாடுகள் மட்டுமே உள்ளன. அவை, அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஆகும்.
இதில், அமெரிக்கா கிட்டத்தட்ட $55.65 டிரில்லியன் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து சீனா ($9.4 டிரில்லியன்), ஜப்பான் ($6.42 டிரில்லியன்), ஹாங்காங் ($5.47 டிரில்லியன்) ஆகியவை உள்ளன.
2024 ஆம் ஆண்டில் இதுவரை, இந்திய பங்குச்சந்தையின் மதிப்பு கிட்டத்தட்ட 12 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம், அமெரிக்காவில் 10 சதவீதமும், ஹாங்காங்கில் 16 சதவீதமும் அதிகரித்துள்ளது. சீனா மற்றும் ஜப்பானின் பங்குச்சந்தை மதிப்பு பெரிதாக மாற்றமடையவில்லை. சீனாவில் 1.4 சதவீதமும், ஜப்பானில் 3 சதவீதமும் மட்டுமே உயர்ந்துள்ளது.
வளர்ச்சிக்கு என்ன காரணம்: இந்திய பங்குகளின் சந்தை மூலதன மதிப்பின் உயர்வு பல்வேறு சந்தை குறியீடுகளின் எழுச்சியால் ஏற்பட்டு உள்ளது. சென்செக்ஸ் 2024 இல் இதுவரை 2.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, ஆனால் பிஎஸ்இ மிட்கேப் 11.5 சதவீதமும், ஸ்மால்கேப் 16.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications