நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய சந்தைகளுக்கு, ஹோலி பண்டிகை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்தன. குறிப்பாக சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் அதிகரித்து, 49,008.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 182.40 புள்ளிகள் அதிகரித்து 14,507.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
ஆசிய சந்தைகள் பலவும் இன்று ஏற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தைகளுக்கு விடுமுறை என்பதால், இன்றும் ஏற்றத்தில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இன்று இந்திய சந்தைகள் விடுமுறை என்பதால்,இதன் எதிரொலி நாளை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிபுணர்கள் நாளை சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என கூறுகின்றனர். ஏனெனில் சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் காரணிகள், இரண்டாம் கட்ட கொரோனா பரவல், அதிகளவிலான கமாடிட்டி பொருட்கள் விலை என பலவும் சந்தைக்கு எதிராக அமைந்துள்ளன.
ஆக சந்தை முதலீட்டாளர்கள் தொடர்ந்து சர்வதேச சந்தையினை கண்கானித்து வருகின்றனர். இதன் காரணமாக சந்தை மீண்டும் ஏற்ற இறக்கத்தினை சந்திக்கலாம் என எதிர்பார்க்கின்றனர். இதன் காரணமாக சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தை மீண்டும் சரிவினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.