இந்தியப் பங்குச்சந்தையில் டெரவேட்டிவ் பிரிவில் வர்த்தக நேரத்தை நீட்டிப்பதற்கான NSE-யின் பரிந்துரைக்கு எதிராகப் பங்குச் சந்தை வர்த்தகர்கள் கருத்துக்களைத் தெறிக்கவிட்ட நிலையில், இதுவரை 2024ஆம் ஆண்டில் மூன்று விடுமுறை நாட்களில் வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் பங்குச் சந்தை தளமான NSE மற்றும் BSE இயங்க மிகப்பெரிய தொழில்நுட்ப கட்டமைப்பு வருடத்தின் 365 நாளும், ஒரு நொடிகூட தடைப்படாமல் இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த கட்டமைப்பை உறுதி செய்யச் செபி உடன் சேர்ந்து இரு பங்குச்சந்தைகளும் பணியாற்றி வருகிறது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் NSE மற்றும் BSE ஆகிய இரு பங்குச்சந்தைகளின் கட்டமைப்பை வலிமையாக்க அதன் முதன்மை தளம் (primary site) மீது எதிர்பாராத இயற்கை பேரிடர் (black swan event) ஏற்பட்டால், சந்தைகள் பேரிடர் மீட்பு தளத்திலிருந்து (disaster recovery site) சரியாக செயல்பட முடியுமா என்பதைச் சோதிப்பதற்காக இந்த ஆண்டு ஜனவரி 20 மற்றும் மார்ச் 2 ஆம் தேதி ஆகிய இரு நாளில் சிறப்பு வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் 3வது சிறப்பு வர்த்தக அமர்வை நாளை நடத்த முடிவு செய்துள்ளது பங்குச்சந்தைகள். இதன் படி இந்த வாரம் சனிக்கிழமை பங்குச் சந்தை குறிப்பிட்ட நேரத்தில் வர்த்தகம் நடைபெறும். இதனால் முதலீட்டாளர்கள் முன்கூட்டியே வர்த்தகம் செய்யத் தயாராகிக்கொள்ளுங்கள்.
சனிக்கிழமை (மே 17) ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி டெரவேட்டிவ் பிரிவில், இரு பங்குச்சந்தைகளின் முதன்மை தளத்திலிருந்து பேரிடர் மீட்பு தளத்திற்கு மாற்றி 2 முறை வர்த்தகம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் முதல் வர்த்தக அமர்வு காலை 9:15 மணி முதல் காலை 10 மணி வரை முதன்மை தளத்தில் இருக்கும். இரண்டாவது வர்த்தக அமர்வு பேரிடர் மீட்பு தளத்திலிருந்து காலை 11:45 மணிக்குத் தொடங்கி மதியம் 12:40 மணிக்கு முடிவடையும்.
வழக்கமான நாட்களில், இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் ஐந்து நாட்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை திறந்திருக்கும்.
இருப்பினும், 2024 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட மூன்று சிறப்புச் சனிக்கிழமை அமர்வுகள், பங்குச் சந்தை செயல்பாடுகளில் பெரிய தடைகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனை முயற்சியின் வெற்றி, எதிர்காலத்தில் வார இறுதி வர்த்தகத்தை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அதிகரிக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து வரும் கருத்துகளையும் NSE மற்றும் BSE ஆகியவை கருத்தில் கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications