10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்.. லாபத்தினை அள்ளிக் கொடுத்த ரியால்டி செக்டார்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று காலையில் ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளது.

குறிப்பாக சென்செக்ஸ் 13.50 புள்ளிகள் குறைந்து 52,72.69 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 2.80 புள்ளிகள் அதிகரித்து, 15,692 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.

இந்திய பங்கு சந்தைகள் இப்படி குழப்பமான நிலையில இருந்தாலும், இன்று ரியால்டி செக்டார் என்பது தூள் கிளப்பியுள்ளது எனலாம். குறிப்பாக சொல்லவேண்டுமெனில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியுள்ளது. சரி என்ன காரணம்? இந்த இன்டெக்ஸின் கீழ் உள்ள பங்குகளும் தூள் கிளப்பியுள்ளனவே என்ன காரணம்.

தேவை அதிகரித்து வருகின்றது?

தேவை அதிகரித்து வருகின்றது?


தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், ரியல் எஸ்டேட் தேவையானது அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இது குறித்து ஆய்வாளார்கள், ரியல் எஸ்டேட் துறையில் தேவை மீண்டு வர ஆரம்பித்துள்ளன. ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விற்கப்படாதவை கூட, தற்போது விற்க தொடங்கியுள்ளன. ஆக இத்துறையின் மீதான மேலோட்டமான பார்வையானது மேம்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்

10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தரமான சம்பவம்

இன்று காலை தொடக்கத்திலேயே அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்தில் இருந்தாலும், ரியல் எஸ்டேட் குறியீடு டாப் கெயினராக காணப்பட்டது. குறிப்பாக எஸ் & பி சென்செக்ஸ் 0.49% ஏற்றத்தில் காணப்பட்ட அதே நேரத்தில், ரியால்டி செக்டார் இண்டெக்ஸ் 3.7% அதிகரித்திருந்தது. இது இன்ட்ரா டே உச்சமாக 3,028.44 புள்ளிகளை தொட்டது. இந்த லெவலானது கடைசியாக கடந்த டிசம்பர் 2010ல் தொட்டதாகும்.

ஹிட் அடித்த இந்தியாபுல்ஸ்
 

ஹிட் அடித்த இந்தியாபுல்ஸ்

குறிப்பாக ரியால்டி செக்டாரில் உள்ள பங்குகளில் இந்தியாபுல்ஸ் பங்கு விலையானது 15% அதிகரித்து டாப் பங்காக உள்ளது. இது குறிப்பாக பிஎஸ்இ-யில் அதன் 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது. அதன் டிரேடு வால்யூம் படி பார்த்தால் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இயில் 54 மில்லியன் ஈக்விட்டி பங்குகள் கைமாறியுள்ளன.

பிஎஸ்இ ரியால்டி செக்டார் பங்குகள்

பிஎஸ்இ ரியால்டி செக்டார் பங்குகள்

Brigade Ent பங்கு விலையானது 2.28% ஏற்றத்திலும், DLF பங்கு விலையானது 3.65% ஏற்றத்திலும், Godrej Prop பங்கு விலையானது 2.63% ஏற்றத்திலும், Indiabulls Real பங்கு விலையானது 15.05% ஏற்றத்திலும், Mahindra Life பங்கு விலையானது 7.37% ஏற்றத்திலும், பங்கு விலையானது 2.28% ஏற்றத்திலும், பங்கு விலையானது 2.28% ஏற்றத்திலும், Oberoi Realty பங்கு விலையானது 2.96% ஏற்றத்திலும், Phoenix Mills பங்கு விலையானது 2.09% ஏற்றத்திலும் முடிவடைந்துள்ளது. இதே போல எம்.எஸ்.இயிலும் ஏற்றத்தினைக் கண்டுள்ளது.

புதிய வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகள்

கொரோனா தொற்று என்பது தற்காலிகமாக ரியால்டி செக்டாரினை சேதப்படுத்தி இருந்தாலும், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக இடங்கள் போன்றவற்றின் தேவையானது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல புதிய வாய்ப்புகளையும் தற்போது உருவாக்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE realty index surged over 10 year high; check details

Market latest updates.. BSE realty index surged over 10 year high; check details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X