மந்தமான வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை..!
இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 11,400 கோடி ரூபாய் மோசடியுடன் கூடுதலாக 1,322 கோடி ரூபாய் அளவிலான மோசடி இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளதுள்ளது. இது வங்கித்துறை பங்குகளை அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 99.36 புள்ளிகள் சரிந்து 34,346.39 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 28.30 புள்ளிகள் குறைந்து 10,554.30 புள்ளிகளை அடைந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, என்டிபிசி, ஹீரோ மோட்டார் கார்ப் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்தது.


Click it and Unblock the Notifications