தனிப்பட்ட பங்குகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த செய்திகள், இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய செய்திகளை அதிகம் சந்தை கவனிக்காதது, பொருளாதார மந்த நிலையில் இருந்து சந்தை மீண்டு வரும் என மாறி இருக்கும் முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் என எல்லாமே இந்திய சந்தைகளுக்கு பாசிட்டிவாக இருக்கிறது. எனவே சென்செக்ஸ் இன்றும் 41,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சீனாவின் ஷாங்காய் காம்போசைட், தவிர பெரும்பாலான ஆசிய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. சில சந்தைகள் மட்டும் ஃப்ளாட்டாக வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,821 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 40,979 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,075 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, சுமார் 95 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
அதே போல நிஃப்டி நேற்று மாலை 12,037 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,068 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,108 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 65 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகி வருகின்றன. பி.எஸ்.இ-யில் 2,336 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,073 பங்குகள் ஏற்றத்திலும், 1,099 பங்குகள் இறக்கத்திலும், 164 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,336 பங்குகளில் 24 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 75 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
யெஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், யூபிஎல், மாருதி சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. லார்சன் அண் ட்டியூப்ரோ, சிப்லா, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.35 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 63.03 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications