ஆஹா... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! பரமானந்தத்தில் நிஃப்டி..!

தீப்பிடித்து எரியும் டெலிகாம் துறை, இந்திய பொருளாதார மந்த நிலை அவ்வளவாக சரியாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு திருப்தி அளிக்கும் காலாண்டு முடிவுகள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பது என எல்லாம் இந்திய சந்தைகளுக்கு சாதகமாக இருக்கின்றன.

இதோடு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள், நேற்று ஏற்றத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆஹா... புதிய உச்சத்தில் சென்செக்ஸ்..! பரமானந்தத்தில் நிஃப்டி..!

இன்று ஆசிய சந்தைகளில் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, ஸ்ரெய்ட் டைம்ஸ், ஹேங் செங், ஜகர்தா காம்போசைட் போன்றவைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஆனால் நிக்கி, தைவான், கோஸ்பி, எஸ் இ டி காம்போசைட் போன்ற சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் ஃப்ளாட்டாக வர்த்தகமாகி வருகிறது.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,889 என்கிற புதிய உச்சத்தில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலையிலேயே சென்செக்ஸ் 41.022 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,120 என்கிற உச்ச புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, சுமார் 220 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

அதே போல நிஃப்டி நேற்று மாலை 12,073 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்று காலை நிஃப்டி 12,110 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 12,132 என்கிற உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட சுமார் 62 புள்ளிகள் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 18 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,205 பங்குகள் வர்த்தகமாகி வருகின்றன. அதில் 1,057 பங்குகள் ஏற்றத்திலும், 1,017 பங்குகள் இறக்கத்திலும், 131 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. மொத்தம் 2,205 பங்குகளில் 32 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 62 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், கெயில், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. பார்தி இன்ஃப்ராடெல், ஜி எண்டர்டெயின்மெண்ட், பார்தி ஏர்டெல், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், க்ராசிம் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.59 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.57 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+