பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தனது மூன்றாவது பட்ஜெட்டினை இன்னும் சில மணி நேரங்களில் தாக்கல் செய்யவுள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன் எதிரொலியாக இந்திய சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன. குறிப்பாக இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சந்தை சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 177.39 புள்ளிகள் அதிகரித்து, 46,463.16 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 89.70 புள்ளிகள் அதிகரித்து, 13,724.30 புள்ளிகள் ஆகவும் காணப்பட்டது.

இதற்கிடையில் சந்தையின் தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 388.62 புள்ளிகள் அதிகரித்து, 46,674 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 101.90 புள்ளிகள் அதிகரித்து, 13,736.50 புள்ளிகள் ஆகவும் தொடங்கியது. இதில் 913 பங்குகள் ஏற்றத்திலும், 347 பங்குகள் சரிவிலும், இதே 74 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ டெக், பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் குறியீடுகல் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை சற்றே ஏற்றத்தில் காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, பிபிசிஎல், ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யுபிஎல், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரியளவில் மாற்றமில்லாமல் 72.94 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.95 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இதற்கிடையில் தற்போது சர்வதேச சந்தையின் எதிரொலியாகவும், பட்ஜெட் எதிரொலியாகவும் சந்தை, ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இது தற்போது சென்செக்ஸ் 308.19 புள்ளிகள் அதிகரித்து, 46,593.96 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 82.20 புள்ளிகள் அதிகரித்து, 13,716.80 ஆகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications