மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பாதுகாப்பு, வாகனம், பேக்கேஜிங் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் தொடர்பான பங்குகளின் விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் மிஸ்ரா தாது நிகாமல் லிமிடெட் உள்பட 4 நிறுவன பங்குகளை வாங்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அந்த 4 நிறுவன பங்குகளை பார்ப்போம்.

மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட்: மத்திய அரசுக்கு சொந்தமான மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் நிறுவனம் சூப்பர்அலாய்கள், டைட்டானியம், சிறப்பு நோக்கத்திற்கான ஸ்டீல் மற்றும் பிற சிறப்பு உலோகங்களை உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் டைட்டானியம் உலோகக் கலவை தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனம் இதுதான். பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளுக்கு தயாரிப்புகளை வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் மத்திய அரசு 74 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது.
பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் தேவையை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புதல் அளித்ததால் ரூ.3.5 லட்சம் கோடி செலவாகும். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வளர்ச்சி. இது வரும் மாதங்களில் இந்த துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இது மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் நிறுவனத்துக்கு சாதகமான விஷயம். எனவே இந்நிறுவன பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இப்பங்கின் இலக்கு விலை ரூ.525-550ஆகவும், இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.394ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.500.25ஆக இருந்தது. இப்பங்கின் விலை மேலும் 10 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்: 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், காப்பீட்டுக்கான தற்போதைய 18 சதவீத ஜிஎஸ்டி மற்றும் 80டி வரி விலக்கு வரம்பின் திருத்தம் ஆகியவற்றில் சில வரி நிவாரணம் கிடைக்கும் என்று காப்பீட்டு துறை மலை போல் நம்புகின்றன.
இந்த துறையை சேர்ந்த ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இப்பங்கு விலை 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
இந்நிறுவனம் முன்னணி தனியார் பொது காப்பீட்டு நிறுவனமாகும். 3 ஆண்டு சிஏஜிஆர் வளர்ச்சியில் வலுவான வருவாய் மற்றும் நிகர லாபத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல் நிறுவனம் ஆரோக்கியமான 29.3 சதவீத டிவிடெண்ட் பேஅவுட் விகிதத்தை வழங்குகிறது. காப்பீட்டு துறை பிஇ சராசரியுடன் (44) ஒப்பிடுகையில் ஐசிஐசிஐ லோம்பார்ட் ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் பிஇ விகிதம் (39) குறைவாக உள்ளது.
இது போன்ற காரணிகள் இந்நிறுவன பங்குகளை வாங்கலாம் என்பதற்கான வலுவான சான்றாக உள்ளது .இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,650-1,700ஆகவும், இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.1,340ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.1,482.05ஆக இருந்தது.
ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்: எதிர்வரும் இடைக்கால பட்ஜெட்டில், வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு பிரத்யேகமாக 2 சதவீதம் மானியத்தை அரசு வழங்கும் என்று எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது. எஃப்ஏஎம்இ திட்டத்தின் மூன்றாம் கட்டம் வெளியிடப்படும், இது வாகன துறைககு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட் நிறுவனம் வாகன வீல் ரிம்களை வடிவமைத்து, சப்ளை செய்கிறது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 21.1 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் நல்ல லாப வளர்ச்சியை வழங்கியுள்ளது.
சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு 0.75 சதவீதத்திலிருந்து 1.46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் இப்பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இப்பங்கின் இலக்கு விலை ரூ.315-330ஆகவும், இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.245ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.277.65ஆக இருந்தது. இப்பங்கு விலை 21 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
ஜேகே பேப்பர்: மத்திய பட்ஜெட்டில், காகித இறக்குமதி வரியில் நிவாரணம் வழங்கப்படலாம் என்றும், ஆர்ஓடிடிஇபி திட்டம் மற்றும் வட்டி சமன்படுத்தும் திட்டங்கள் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும் என்றும் சில எதிர்பார்ப்புகள் காணப்படுகிறது.
ஜேகே பேப்பர் நிறுவனம் பிராண்டட் காப்பியர் பிரிவில் 30 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் 36.4 சதவீதம் கூட்டு ஆண்டு வளர்ச்சியுடன் சிறந்த வளர்ச்சியை வழங்கியுள்ளது.
மேலும் முதலீட்டாளர்களுக்கு 18.9 சதவீதம் ஆரோக்கியமான டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் சந்தை பங்கு 10.4 சதவீதத்தில் இருந்து 15.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்நிறுவன பங்கை வாங்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
இப்பங்கின் இலக்கு விலை ரூ.500-520ஆகவும், இப்பங்கின் ஸ்டாப் லாஸ் ரூ.385ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இப்பங்கின் விலை ரூ.420.30ஆக இருந்தது. இப்பங்கு 20 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications