2024ம் ஆண்டு உலகளவில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி இங்கிலாந்து உள்பட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆண்டு தேர்தல்கள் நடைபெற உள்ளது.
இதனால் பல நாடுகளில் குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சாத்தியமான தலைமை மாற்றங்கள் அரங்கேற வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு சர்வதேச அளவில் பங்குச் சந்தையில் நீடித்த ஏற்ற இறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு லீப் ஆண்டுகள் நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தைகள் பார்த்துள்ளன.

ஒவ்வொரு 3.5 முதல் 4 ஆண்டுகளுக்கு இந்திய பங்குச் சந்தை சுமார் 25 சதவீதம் வரை வீழ்ச்சியை எதிர்கொள்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. எனவே 2024 லீப் ஆண்டு என்பதால் இந்த ஆண்டு ஒட்டுமொத்த சந்தையும் ஏற்ற இறக்கத்தை சந்திப்பதற்கான சாத்தியக கூறுகளை அதிகரிக்கிறது.
தற்போது பல பென்னி பங்குகளின் விலை அதிவேகமான உயர்வால் தற்போது சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தெளிவாக தெரிகிறது. அதேசமயம், பெரும்பாலான பென்னி பங்கு நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை, நிலையான வணிக மாதிரி அல்லது நிர்வாக ஒருமைப்பாடு ஆகியவற்றை கொண்டிருக்கவில்லை என்பது யாராலும் மறுக்க முடியாது.
இந்த குறைபாடுகள் சந்தையின் அதிவேக ஏற்றத்தில் மறைக்கப்படுகின்ற அல்லது கண்டு கொள்ளாமல் இருக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது, அத்தகைய பென்னி ஸ்டாக்கை பரிந்துரைக்கும் ஒவ்வொருவரும் ஒரு நம்ப வைக்கும் கதையை கொண்டுள்ளனர்.
இவற்றை நம்பி முதலீட்டாளர்கள் தங்களது போர்ட்போலியாவில் பல நிலையற்ற மற்றும் அபாயகரமான பங்குகளை வாங்கி குவிப்பர். இது அவர்களது வருமானத்தில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது ஆனால் அது அவர்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.
உங்கள் போர்ட்போலியாவில் 20 சதவீத நிதி ஒதுக்கீட்டில் வைத்திருக்கும் 5 பங்குகள் 50 சதவீதம் உயர்ந்தால், அது உங்கள் போர்ட்போலியா மதிப்பை 10 சதவீதம் சேர்க்கும்.
அதேசமயம், 5 சதவீத ஒதுக்கீட்டில் வைத்திருக்கும் 20 பங்குகள், 50 சதவீதம் லாபம் அடைந்தால் அது உங்கள் போர்ட்போலியா மதிப்பை 3 சதவீதம் மட்டுமே உயர்த்தும்.
இதேபோல் 2 சதவீத நிதி ஒதுக்கீட்டில் வைத்திருக்கும் 50 பங்குகள் 100 சதவீதம் லாபம் அடைந்தால் அது உங்கள் போர்ட்போலியோ மதிப்பை 2 சதவீதம் மட்டுமே உயர்த்தும். இதேபோல் 1 சதவீத நிதி ஒதுக்கீட்டில் வைத்திருக்கும் 100 பங்குகள் 100 சதவீதம் உயர்ந்தால் உங்கள் போர்ட்போலியா மதிப்பை 1 சதவீதம் மட்டுமே உயர்த்தும்.
தற்போது முதலீட்டாளர்கள் பென்னி பங்குகளில் முதலீடு செய்தால் தங்கள் பணத்தை விரைவாக இரட்டிப்பாக்கலாம் என்ற நம்பிக்கையில் பென்னி பங்குகளை வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக அதிக அபாயங்களை எடுத்துக் கொள்கிறார்கள்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புகழ்பெற்ற பேராசிரியர் பர்டன் மார்க்கீல் கூறுகையில், உங்கள் போர்ட்போலியாவில் 20 சம அளவிலான மற்றும் நன்கு பன்முகப்படுத்தப்பட்ட பங்குகள் இருந்தால், போர்ட்போலியாவின் மொத்த ஆபத்து 70 சதவீதம் குறைக்கப்படும்.
பங்குகளை சேர்ப்பது (பென்னி பங்குகளை அதிகளவில் போர்ட்போலியாவில் சேர்ப்பது) ஆபத்துக்கு குறைப்புக்கு அதிகம் பங்களிக்காது என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications