மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றன. பொதுவாக பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள், பங்குச்சந்தை வீழ்ச்சியில் இருக்கும் போது அதிக முதலீடு செய்து பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது அதனை விற்பனை செய்து லாபம் பெற வேண்டும் என கூறுவார்கள்.
அப்படியெனில் பங்குச்சந்தை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கும்போது நாம் முதலீடு செய்ய கூடாதா என்ற சந்தேகம் எழுகிறது. இது தொடர்பாக ஃபண்ட்ஸ் இந்தியா( FUNDS INDIA) நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டியில் விரிவாக விளக்கியுள்ளார்.

பங்குச்சந்தைகள் உச்சத்தில் இருப்பதை மூன்று லென்ஸ்களை கொண்டு காண வேண்டும் என அறிவுரை வழங்குகிறார். முதல் லென்ஸ்: ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் இவை எப்பொழுதுமே வளர்ச்சி பாதையிலேயே இருக்கின்றன, அதாவது வரலாறு காணாத உச்சத்தை தொட்டுக் கொண்டே இருக்கின்றன.
அதேபோல நம்முடைய ஜிடிபி வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ஈக்விட்டி பொதுவாக 12 முதல் 15 % லாபத்தை தரக்கூடியவை. அதாவது ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் பங்குச்சந்தையின் மதிப்பு என்பது இரண்டு மடங்காக வளர்கிறது.
தற்போது சென்செக்ஸ் 70,000 புள்ளிகள் என்ற அளவில் இருக்கிறது. ஒருவர் ஈக்விட்டி சந்தையிலிருந்து 12% லாபம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார் என வைத்துக் கொண்டால் அடுத்த ஆறு ஆண்டு காலத்தில் சென்செக்ஸ் மதிப்பு என்பது 1,40,000 ஆக உயரும் என கணிக்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
அடுத்த 12 ஆண்டுகளில் இது 2,80,000 புள்ளிகள் என்ற அளவை எட்டி இருக்கும். இதுதான் உங்களது எதிர்பார்ப்பு என்ற போது, இது போல உச்சத்தை தொடாமல் அத்தகைய வளர்ச்சியை பங்குச்சந்தையால் எட்ட முடியாது.
எனவே பங்குச்சந்தை தன்னுடைய வரலாறு காணாத உச்சத்தை அடைவது என்பது பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கான பயணத்தின் ஒரு பகுதி தான் என சுட்டிக்காட்டுகிறார்.
இரண்டாவது லென்ஸ்: சென்செக்ஸ் என்பது 2017 ஆம் ஆண்டில் 34,000 புள்ளிகளாக இருந்து தற்போது 74,000 புள்ளிகள் என வளர்ந்துள்ளது. ஈக்விட்டி சந்தை வளர வளர சென்செக்ஸின் மதிப்பும் வளர்ந்து வருவது இயற்கை தான்.
எனவே பங்குச்சந்தை உச்சத்தை அடைகிறது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி தான். கடந்த 25 ஆண்டுகளில் இதுபோல வரலாறு காணாத உச்சத்தின் போது செய்யப்படும் முதலீடுகள் சராசரியாக அடுத்த ஓராண்டு காலத்தில் 14 % லாபத்தை தந்துள்ளன. சந்தை உச்சத்தில் இருக்கும் போது செய்யப்படும் முதலீடு லாபம் தந்துள்ளன என்பதற்கு சான்று உள்ளது என கூறுகிறார்.
மூன்றாவது லென்ஸ்: பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது செய்யும் முதலீடுகள் சராசரியாக 14 % லாபத்தை உங்களுக்கு தரும். எனவே இது பங்குச்சந்தை இதுபோல உச்சத்தில் இருக்கும்போது அதனை கண்டு அச்சமடைய கூடாது முதலீட்டாளர்கள் தைரியமாக முதலீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications