1982ல் தொடங்கப்பட்ட நிறுவனம் சந்திரிமா மெர்கன்டைல்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் முதன்மையாக விவசாய பொருட்களின் வர்த்தகத்தில் செயல்படுகிறது. முன்னதாக, கட்டுமான பொருட்கள், ஜவுளி, தங்கம், வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் சணல் உள்பட பரந்த அளவிலான பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. தற்போது இந்நிறுவனம் விவசாய துறையில் தனது வணிகத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பென்னி பங்கு
சந்திரிமா மெக்கன்டைல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளர்களை ஈர்க்கும் அளவுக்கு பெரிய அளவில் இல்லை. பென்னி பங்காக இருந்தாலும், சந்திரிமா மெக்கன்டைல்ஸ் பங்கு முதலீடாளர்களுக்கு பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 1,070 சதவீதம் பெருக்கியுள்ளது.

இப்பங்கு தனது 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து இதுவரை முதலீட்டாளர்களுக்கு 334 சதவீதம் மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. சந்திரிமா மெக்கன்டைல்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் நிகர வருவாயாக ரூ.29.19 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 51 சதவீதம் வளர்ச்சியாகும். கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.73 லட்சம் ஈட்டியுள்ளது. இது 2023-24ம் நிதியாண்டைக் காட்டிலும் 181 சதவீதம் அதிகமாகும்.
பங்கு பிரிப்பு தேதி
சந்திரிமா மெக்கன்டைல்ஸ் லிமிடெட் நிறுவனம் 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. இது பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்கு பிரிப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குகளை பிரிப்பதால், சில்லரை முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை எளிதாக அணுகக் கூடியதாக மாற்றும். சந்தையில் பங்குகளின் பணப்புழக்கத்தை மேம்படுத்தும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சந்திரிமா மெக்கன்டைல்ஸ் நிறுவன பங்கின் விலை 2 சதவீதம் குறைந்து ரூ.49.52 வரை சென்றது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.110.06 கோடியாக உள்ளது.
மல்டிபேக்கர் லாபம்
2024 மே 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சந்திரிமா மெக்கன்டைல்ஸ் நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்தபட்சமான ரூ.11.42க்கு சென்றது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காண தொடங்கியது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கின் விலை 400 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது.
பங்கு விலையோ ரூ.100க்கும் குறைவு.. ஒரே ஒரு செய்தியால் தடாலடியாக உயர்ந்த பார்மா நிறுவன பங்கு..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications