உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்தை இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2019 உலகப்கோப்பை அரையிறுதி தோல்விக்கு பழிதீர்த்தது. முதலில் ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அதிரடி துவக்கம், கோலியின் 50வது சதம், ஸ்ரேயாஸின் மின்னல் வேக சதம் காரணமாக 50 ஓவர்களில் 397 ரன்கள் அடித்தது.
பின்னர் நியூசிலாந்து இமாலய ரன் இலக்கை துரத்தும் நோக்கில் ஆட்டத்தை ஆரம்பித்தது. இருப்பினும் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன், டேரில் மிட்செல் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 327 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனையடுத்து இந்தியா 4வது முறையாக உலகப் கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. குறிப்பாக பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. கிரிக்கெட்டுக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? இந்திய வெற்றியில் முதலீட்டாளர்களுக்கு எப்படி சந்தோஷம் என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுந்திருக்கும்.
நிறுவன பங்குகள் தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு நிறுவனமான சார்ட்மோஜோ நிறுவனத்தின் நிறுவனர் சுனில் குர்ஜார், இந்தியா வெற்றி பெற்றதால், முதலீட்டுக்கு தகுந்த நல்ல ஆதாயம் தரும் தனது சிறந்த 5 அதிக நம்பிக்கையான பங்குகளை தெரிவிப்பதாக தெரிவித்து இருந்தார்.
சுனில் குர்ஜார் நேற்று இரவு எக்ஸில், இறுதியாக, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்றது. மேலும் எனது சிறந்த 5 உயர் உறுதியான பங்கு தேர்வுகளை நாளை பகிர்ந்து கொள்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

இந்த பதிவை சுமார் 1.65 லட்சம் பேர் பார்த்துள்ளனர். சொன்ன சொல்லை தவறமாட்டான் இந்த கோட்டை சாமி என்பது போல் அவர் இன்று தனது 5 உயர் நம்பிக்கையான பங்குகளின் பெயர்களையும் ஷேர் செய்தார்.
சுனில் குர்ஜார் இன்று காலை எக்ஸில், இந்தியா நேற்று வெற்றி பெற்றது மற்றும் எனது உயர் நம்பிக்கை 5 பங்குகளை பகிர்ந்து கொள்வதாக உறுதியளித்தேன்.
1.அசோகா பில்ட்கான்
2.ஆதித்யா பிர்லா மணி
3மணப்புரம் பைனான்ஸ்
4.தி ஹைடெக் கியர்ஸ்.
இன்று மாலை நான் 5வது பங்கை ஷேர் செய்கிறேன் என்று பதிவு செய்து இருந்தார். சொன்னப்படி சிறிது நேரத்துக்கு முன் சுனில் குர்ஜார் எக்ஸில், 5வது பங்காக மேப்மைஇந்தியா (சி.இ. இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட்) நிறுவன பங்கை குறிப்பிட்டார். சுனில் குர்ஜார் குறி்ப்பிட்ட 5 பங்குகளும் இன்று மும்பை பங்குச் சந்தையில் 4 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அசோகா பில்ட்கான்: சிவில் கட்டுமான துறையை சேர்ந்த நிறுவனம் அசோகா பில்ட்கான் லிமிடெட். மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை 4.52 சதவீதம் உயர்ந்து ரூ.146.75ஆக இருந்தது.
ஆதித்யா பிர்லா மணி: பங்கு தரகு வர்த்தகத்தில் ஆதித்யா பிர்லா மணி லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.06 சதவீதம் உயர்ந்து ரூ.116.53ஆக இருந்தது.
மணப்புரம் பைனான்ஸ்: இந்நிறுவனம் ஒரு வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமாகும். மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.61 சதவீதம உயர்ந்து ரூ.160.40ஆக இருந்தது.

தி ஹைடெக் கியர்ஸ்: வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் தி ஹைடெக் கியர்ஸ் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 19.99 சதவீதம் உயர்ந்து ரூ.497.25ஆக இருந்தது.
மேப்மைஇந்தியா: டிஜிட்டல் மேப் உள்பட சாப்ட்வேர் புராடக்ட் வழங்கும் தொழில்நுட்ப நிறுவனம் சி.இ. இன்போ சிஸ்டம்ஸ் லிமிடெட் (மேப்மைஇந்தியா). மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.03 சதவீதம் உயர்ந்து ரூ.2,276.95ஆக இருந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications