சென்னை: இந்திய முதலீட்டு சந்தையில் தற்போது தங்கத்தை காட்டிலும், தங்க நகை கடைகள் மீதான முதலீட்டு ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் வாங்குவதை காட்டிலும் தங்கம் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வது மூலம் பெரும் லாபத்தை பெற முடியும் என நம்பும் காரணத்தால் டைட்டன், கல்யாண், தங்கமயில், பிசி ஜுவல்லர், பிஎன் காட்கில் லலிதா ஜுவல்லர்ஸ், சென்கோ கோல்டு போன்ற நிறுவனங்கள் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படுகிறது.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு தென்னிந்திய மாநிலங்களில் வர்த்தகம் செய்யும் லலிதா ஜுவல்லரி பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிட உள்ளது.

லலிதா ஜுவல்லரி மார்ட் லிமிடெட் இந்த ஐபிஓ-வில் 5 ரூபாய் முகமதிப்புடன் 190 முதல் 201 வரையிலான விலை அளவீட்டில் வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி ஐபிஓ முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட உள்ளது, மேலும் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் ஆகஸ்ட் 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 19ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஐபிஓ மூலம் கிரண் குமார் ஜெயின் தலைமையிலான லலிதா ஜுவல்லரி நிர்வாகம் சுமார் 1200 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை திட்ட உள்ளது. இதில் கிரண் குமார் மட்டும் OFS முறையில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்கிறார்.
இந்த ஐபிஓ-வில் சுமார் 50 சதவீத பங்குகள் QIB முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் NII முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதத்திற்கும் குறைவான பங்குகள் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. லலிதா ஜுவல்லரி ஐபிஓ-வில் பங்கு விலை ரூ.190 முதல் ரூ.201 அளவிலான விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது மூலம் ஒரு லாட்டுக்கு 74 பங்குகள் கிடைக்கும்.
இதேபோல் சுமார் 6 கோடி பங்குகளை 10 சதவீத தள்ளுபடி விலையில் லலிதா ஜுவல்லரி ஊழியர்களுக்கு கிரன் குமார் தலைமையிலான நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்தவர்களுக்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும், ஆகஸ்ட் 24 ஆம் தேதி மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை என இரண்டிலும் பட்டியலிடப்பட உள்ளது.
லலிதா ஜுவல்லரி தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுமார் 61 கடைகளை கொண்டு இயங்கி வருகிறது. இதில் 45 கடைகள் 2ஆம், 3ஆம் நிலை நகரங்களில் கொண்டு சுமார் 60.25 சதவீத வருமானத்திற்கு பங்கு வகிக்கிறது.
மேலும் லலிதா ஜுவல்லரி சந்தையில் இருக்கும் பிற முன்னணி ஜுவல்லரிகளை காட்டிலும் அதிகப்படியான operating revenue per store கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
லலிதா ஜுவல்லரி நிறுவனம் 2026ஆம் நிதியாண்டில் லாபத்தில் 177 சதவீத உயர்வுடன் 1009.8 கோடியும், வருமானத்தில் 48.1 சதவீக உயர்வுடன் 25,023.9 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. ஆனால் 2025ஆம் நிதியாண்யில் லாபத்தில் 1.4 சதவீதமும், வருமானத்தில் 0.65 சதவீதம் அளவிலான வருமானத்தை மட்டுமே பெற்றுள்ளது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications

