ஏற்றத்தில் தொடங்கி சரிவில் முடிந்த சென்செக்ஸ்.. மாற்றமின்றி முடிந்த நிஃப்டி.. !

நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் தொடங்கி, முடிவில் குழப்பத்தில் தான் முடிவடைந்துள்ளன. ஏனெனில் சென்செக்ஸ் சரிவிலும், நிஃப்டி ஏற்றத்திலும் முடிவடைந்துள்ளது.

கடந்த வாரத்தில் இருந்தே தொடர்ச்சியாக ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும், இந்திய பங்கு சந்தையில், இந்த வாரத்தில் எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி இருப்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு அமெரிக்காவின் ஜிடிபி விகிதம், பணவீக்கம் பற்றிய கவலைகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவும் மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. இதற்கிடையில் இந்த வாரத்தில் இன்னும் இந்த ஏற்ற இறக்கம் தொடரலாம் என்ற நிலையே இருந்த வருகின்றது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இன்று காலை சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் 252.64 புள்ளிகள் அதிகரித்து, 50,904.54 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 84.20 புள்ளிகள் அதிகரித்து, 15,281.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து தற்போது முடிவில் சென்செக்ஸ் 14.37 புள்ளிகள் குறைந்து, 50,637.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 10.75 புள்ளிகள் அதிகரித்து, 15,208 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து 1749 பங்குகள் ஏற்றத்திலும், 1307 பங்குகள் சரிவிலும், 147 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளன.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு


இதற்கிடையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள பிரிட்டானியா, ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஈச்சர் மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், பஜாஜ் பின்செர்வ், ஒ.என்.ஜி.சி, டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ரிலையன்ஸ், இந்தஸிந்த் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

ரூபாய் நிலவரம் என்ன?

ரூபாய் நிலவரம் என்ன?

இன்று சந்தையில் புராபிட் புக்கிங் காரணத்தினாலும், அடுத்த காண்டிராக்டில் ரோல் ஓவர் செய்வதாலும் பெரியளவிலான ஏற்ற இறக்கம் இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா அதிகரித்து, 72.77 ரூபாயாக காணப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+