அதிரடியில் சென்செக்ஸ்..! காலை இறக்கம் மாலை ஏற்றம்! முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..!

மும்பை: ஜூலை 05, 2019 பட்ஜெட்டுக்குப் பிறகு ஒரு முறை கூட சென்செக்ஸ் 36,500-க்குக் கீழ் வர்த்தகம் நிறைவடைந்தது இல்லை. நேற்று தான் முதல் முறையாக சென்செக்ஸ் 36,500-க்குக் கீழ் நிறைவடைந்தது. நல்ல வேளையாக இன்று 36,500-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இன்று காலை சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கும் போதே சுமார் 36,103 புள்ளிகள் என இறக்கத்தில் தொடங்கியது. படிப்படியாக ஏற்றம் கண்டு ஒரு வழியாக 36,500-க்கு மேல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.

இன்று மீண்டும் சென்செக்ஸ் தன் 36,400 என்கிற வலுவான சப்போர்ட்டைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. எனவே கூடுதலாக இறக்கம் காணத் தொடங்கினால் 36,400 முதல் நிலை சப்போர்ட்டாகவும், 36,000 புள்ளிகள் இரண்டாவது மற்றும் வலுவான சப்போர்ட்டாகவும் எடுத்துக் கொள்வோம்.

அதிரடியில் சென்செக்ஸ்..! காலை இறக்கம் மாலை ஏற்றம்! முடிவில் 228 புள்ளிகள் உயர்வு..!

ஒருவேளை சந்தை நாளை ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸான 37,000 புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். அப்படிக் கடந்துவிட்டால், அதன் பின் 37,410 ரெசிஸ்டென்ஸ் புள்ளிகளைக் கடக்க வேண்டி இருக்கும். ஆகவே இந்த இரண்டு புள்ளிகளையும் ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம்.

இன்று காலை சென்செக்ஸ் 36,387 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 36,103 புள்ளிகள் வரை இறக்கம் கண்டு மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கி 36,701 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 228 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது. அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,699 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,829 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 88 புள்ளிகள் அதிக ஏற்றம் கண்டிருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 22 பங்குகள் ஏற்றத்திலும், 08 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 41 பங்குகள் ஏற்றத்திலும், 09 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,583 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,323 பங்குகள் ஏற்றத்திலும், 1,127 பங்குகள் இறக்கத்திலும், 133 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,583 பங்குகளில் 16 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 518 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. வங்கி, எஃப் எம் சி ஜி, தனியார் வங்கி துறைகள் மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், ரிலையன்ஸ், ஹெச் டி எஃப் சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.

ஜி எண்டர்டெயின்மெண்ட், வேதாந்தா, யூபிஎல், யெஸ் பேங்க், பாரத் பெட்ரோலியம் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, ஐசிஐசிஐ ஏங்க், ஈஷர் மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.68-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.78 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+